Wednesday, December 24, 2008

கிருஸ்துமஸ்.....


இன்று இரவு கிருஸ்து பிறந்த இரவு. போதநூரில் எப்பொழுதும் களைகட்டும் கிருஸ்துமஸ் காலம் இந்த ஆண்டு ரொம்பவும் சோகையாக இருக்கிறது. காரணம் தரியவில்லை. என் பள்ளி நாட்களில் கிருச்துமசுக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை அலங்கரிப்பதிலும், கிருஸ்துமஸ் குடில் அமைப்பதிலும், வாழ்த்து அட்டைகள் வாங்குவதிலும், வண்ண விளக்குகள் அமைப்பதிலும் சுருசுப்பாக இருப்போம். இரவு நேரங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நண்பர்களுடன் கேரல் ரவுண்ட் போவோம். ஆண்டின் இறுதி வாரம் முழுவதும் ரயில்வே இன்ஸ்டிட்யூடில் ஆங்கிலோ இந்தியன் நண்பர்கள் கூட்டம் பாட்டும் ஆட்டமும் கேளிக்கைகளும் நிறைந்து கிளுகிளுப்பாக இருக்கும். இன்ஸ்டிட்யூட்டின்உள்ளே செல்பவர்கள் கோட் சூட் போட்டிருக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனை உள்ளதால் முக்கால்வாசி ஜனம் வெளியிலிருந்தே ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும். மது பானங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்படும். மொத்தத்தில் அந்த கும்பலே இங்கிலாந்தில் இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களுக்கு வரும் ஆங்கிலத்தில் வெளுதுக்கொண்டிருக்கும்.



இன்று நிலைமை அப்படியில்லை. முதலாவதாக போதநூரின் கடும் குளிர் காணாமல் போயவிட்டது. அடுத்து நாடு இரவில் ஊரில் ரவுண்ட் வர யாருக்கும் நேரமில்லை. எங்கே டி. வீ. பார்த்துவிட்டு படுப்பதற்கே நடுநிசி ஆகிவிடுகிறதே. பிறகெங்கே மற்றதெல்லாம்.

Sunday, December 21, 2008

இது எப்படி இருக்கு?

தொலைக் காட்சியில் ஒரு சின்ன விளம்பரம். சின்னப் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், இடையில் டெண்டுல்கர் புகுந்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மற்ற பெரியவர்களையும் விளையாட்டுக்குள் இழுக்கிறார். நடைமுறையில் இது சாத்தியப்படுமா? யோசித்துப் பார்த்தல் வேதனைதான் மிச்சம். டெண்டுல்கர் போல எத்தனையோ பிரபலங்கள் ஒரு தனியான நேரத்துக்காக ஏங்குவார்கள். வீட்டிலிருந்து இறங்கி தனியே கடைவீதியில் நடக்க முடியாது. சினிமாவுக்கு போகவேண்டுமேன்றால்கூட இரவில் யாருமறியாமல் (சில நேரங்களில் முக்காடிட்டு அல்லது மாறுவேடம் பூண்டு) ராஜா கதைகளில் வருவதுபோல போக வேண்டும். இவ்வளவும் தாமே வரவழைத்துக் கொண்டது. சுதந்திரத்தை விற்றுப் புகழ் தேடி இவர்கள் என்ன கண்டார்கள். இன்று உச்சியில் இருக்கும்போது சுதந்திரம் இல்லை. நாளை வீழ்ச்சி கண்டால் சீந்துவாரில்லை. இப்படியொரு புகழையா இவர்கள் விரும்புவார்கள்? யோசித்துப் பார்த்தல் இந்தப் பிரபலங்கள் தங்கள் புகழையும் விற்றுக் காசு பண்ணுபவர்கள். இவர்களுக்குப் பணம்தான் பெரிது. நாட்டுக்காக விளையாடுபவர்களும் , மக்களுக்காக உழைப்பவர்களும், ரசிகர்களுக்காக தங்கள் கலை சேவையை செய்பவர்களும் எல்லோரும் பணம் பண்ணுவதைதான் கடமையாகக் கொண்டுள்ளனர். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

தனி மனித சுதந்திரம் யாருக்கும் புரியாத பொது இவர்களின் இழப்பை நாம் பெரிதாக நினைக்கத் தேவையில்லை .

Thursday, December 11, 2008

கார்த்திகை...

கார்த்திகை பண்டிகை வந்தால் ஊரே அழகானதுபோல ஒரு பிரமை உண்டாகும். எல்லா வீடுகளின் முன்புறத்திலும் பெரியதாகக் கோலமிட்டு நடுவில் யானை விளக்கு வைத்து அதனைச் சுற்றிலும் சிறிய விளக்குகளை வரிசையாகவும் வட்டமாகவும் பல விதங்களில் வைத்து, வீட்டின் முகப்பிலும், சாளரங்களிலும், முகடுகளிலும் வரிசையாக விளக்கேற்றி வைத்து . . . . . பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும். என்னதான் மின்விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்தாலும் நல்லெண்ணெய் மணத்துடன் அகல் விளக்கு எரியும் அழகும் அது தரும் இன்ப உணர்வும் அனுபவிதவருக்கே அலுப்புத் தட்டாத அற்புதம்.

கிராமத்துக் கோவில்களில் சிறப்பு அலங்காரங்களும் பூசனைகளும் அதனை கண்டு மகிழ தங்களையும் சிறப்புற அலங்கரித்து வரும் பெண்டுகளும், ஊரில் மற்ற வீடுகளின் அலங்காரங்களைக் காணவேண்டி வீதி வலம்வரும் இளசுகளும் என்று ரொம்பவும் விமர்சையாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம் மெழுகுவர்த்திகளும் சீரியல் பல்புகளும் வந்த பொழுதும் காற்றில் அசைந்தாடும் என்னை விளக்குகள்தாம் மனதை கவர்கிறது. சில வீடுகளின் சுவற்றில் விளக்கிலிருந்து என்னை வழிந்து கோடுகளாக அடுத்து சுண்ணாம்பு அடிக்கும் நாள்வரை கார்த்திகையை நினைவுபடுத்தும்.

பொரி உருண்டை, அவல் உருண்டை, அடை வெண்ணை என்று நாவுக்கும் விருந்து உண்டு. ஆக மொத்தத்தில் வேறு எந்த விசேஷங்களும் தராத ஒரு சந்தோஷத்தை நான் கார்த்திகை பண்டிகையில் அனுபவிக்கிறேன்.

Saturday, December 6, 2008

ஸ்ரீரங்கம்...

அது என்னவோ தெரியவில்லை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்குப் போனால் என்னுள் ஏதோஒரு இன்ப உணர்வு தலை தூக்குகிறது. ஏதோ ரொம்ப நாள் பிரிந்திருந்த ஒன்றை நெருங்கும் உணர்வு. என் ஆழ்மனத்தின் அடையாளம் எனக்கு சரிவர புரிவதில்லை. ஆனால் அந்த இன்பத்தை அனுபவிக்கவேண்டி திரும்பவும் அங்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு என்னை உந்துகிறது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்ற போது அத்தகைய ஒரு உணர்வு ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையினால் காவிரி ஆற்றின் கரைகளைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடியது. ஆங்காங்கே மணல் திட்டுக்களும், கரையோரம் கோரைப் புல்பதர்களும், மணல் திட்டுக்களில் ஆடும் சிறார்களும், ஐய்யப்பன் பக்தர்களும் எல்லாமே பார்க்க இனிமையாக தோன்றின. வழிநெடுகிலும் சாதாரணமாக சகதியும் குப்பையும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்திருக்கும் வாய்க்கால்களில் இன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஸ்ரீரங்கம் போய சேரும்போது சயந்திரம் ஆகிவிட்டது. உடனே கோவிலுக்குப் புறப்பட்டு விட்டேன். முன்னொரு சமயம் போனபோது நேரம் போதாமையால் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்த முறையாவது இந்த ஆலயத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கவலை. கோவிலில் கூட்டம் அதிகமில்லை. பெருமாளை நன்றாக சேவிக்க முடிந்தது. தாயார் சந்நிதி, கண்ணாடி அறை சேவை , ஆயிரம்கால் மண்டபம் என்று எல்லாவற்றையும் ஆனந்தமாக கண்டு களித்தேன். மறுநாள் காலை விஸ்வரூபதரிசனம் காண தாய் தந்தையருடன் சேர்ந்து கோவிலுக்கு போனேன்.

விஸ்வ ரூபதரிசனம் துவங்கும் நேரம் காலை ஆறு மணி என்றரிந்துகொண்டு முன்னமே போய் தரிசன டிக்கெட் எடுத்துக் கொண்டேன். பெருமாள் சந்நிதியின் முன் ஒருவர் இருந்து வீணை இசைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு பசு மாட்டை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமமிட்டு நிறுத்தியிருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு யானை அங்கு வந்து பகவானை நோக்கி நின்றது. அதற்குப் பின்னால் ஒரு குதிரை. திரை விலகியவுடன் யானை துதிக்கையை தூக்கி மூன்று முறை பிளிறியது. பின்னர் இவை எல்லாம் விலக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். அப்பா அம்மாவுடன் சேர்ந்து சென்றால் எல்லாமே விசெஷமாகிவிடுகிறது. அப்பாவைக் கண்டவுடன் பட்டார் அவரை அருகில் அழைத்து பெருமாளை நன்றாக சேவிக்கச் சொன்னார். ஆதி செஷன், பள்ளி கொண்ட பெருமான் , ஸ்ரீதேவி , பூதேவி என்று விளக்கி எல்லாவற்றையும் காண்பித்தார். இவ்வளவு ஆனந்தம் என்று சொல்ல முடியாது. நான் நினைத்திருந்ததைவிட ஒருபடி அதிகமாக அனுபவித்தேன்.

Monday, December 1, 2008

உயிரே உன் விலை என்ன???

ஆளை அடிக்க முடியாவிட்டால் அவன் பீயை அடிப்பது என்று கிராமப்புறத்தில் ஒரு கூற்றுண்டு. அதுபோல் உள்ளது சமீபத்தில் மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம். எதிரியை எதிர்கொள்ள முடியாத கோழைகளின் கொடூரச் செயல். இத்தனை வீரம் என்று, தியாகம் என்று எண்ணும் இதயங்கள் வெட்கித் தலை குனியட்டும்.
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கும் அவன் விரும்பும் இறைவனை வழிபடுவதற்கும் உத்தரவாதமளிக்கும் ஜனநாயகத்தை விரும்பாத ஒரு கும்பல், தங்கள் சித்தாந்தமும், தங்கள் இறைவனும் சிறந்தது, மற்றவை அனைத்தும் அழிந்துபோக வேண்டியது என்று நம்பும் காட்டுமிராண்டிகள் தங்கள் ஆதாயத்துக்காக இளம் தலைமுறையினரை மூளைச் சலவை செய்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்தப் பிரிவினைவாதம் நம் நாட்டிலும், ஏன், உலகம் முழுவதுமே பரவிக் கிடக்கிறது. மக்களை பிரித்தாளும் போக்கு மாறவேண்டும். இதற்க்கு தடையாக மதமும் கட்சிகளும் அல்லது வேறேதும் இருந்தால், அதனை உணர்ந்து கிள்ளி எறியவேண்டிய பொறுப்பு அமைதி விரும்பும் அனைவருக்குமே உண்டு.
மாறாக இங்கு நாம் சிறு வயது முதலே இந்த விஷங்களை நம் சமுதாயத்தில் விதைத்துவிட்டு இப்பொழுது அழுது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அவ்வளவு சுலபமல்ல. அனால் அந்த சிந்தனையை விதைக்காமலிருந்தால் இந்த அளவுக்கு சேதங்கள் விளையாமல் தடுத்திருக்கலாம்.

Saturday, October 11, 2008

பொன்னியின் செல்வன்

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பொன்னியின் செல்வன் தொடர் கதையாக கல்கியில் வரப்போகிறதென்று அம்மாவுக்கு ஒரே குஷி. கல்கியின் எல்லா இதழ்களையும் சேர்த்து வைத்து பொன்னியின் செல்வனை தனியே எடுத்து தைத்து புத்தகங்களாக வைத்துக்கொண்டு படிப்பார். அன்றைக்கு இருந்த நிலையில் இவ்வளவு பெரிய கதைப் புத்தகத்தை எப்படிப் படிக்கிறார்களோ என்று மலைத்துப் போயிருக்கிறேன். மணியம் மற்றும் வினு
போன்றோர் கைவண்ணத்தில் சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியமாக காண்போர் கருத்தை கவர்ந்தன. அம்மாவின் கதை சொல்லும் நயத்தினாலும் மேற்கண்ட சிதிரங்களினாலும் கதையைப் பற்றியும் கதாபாத்திரங்களின் குணநலன்கள் பற்றியும் நான் ஒருவிதமான கர்ப்பனையை புனைந்து வைத்திருந்தேன். சமீபத்தில் விகியை நோண்டும்பொழுது திடீரென்று இந்த அரிய பொக்கிஷத்தை கண்டு ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். ஒரே மூச்சில் என்று சொல்லுமளவுக்கு அதனை தொடர்ந்து படித்து முடித்தேன்.
இங்கு நான் பொன்னியின் செல்வன் நாவலை ஆய்வு செய்ய வரவில்லை. இந்த நூல் என்னுள் ஏற்ப்படுத்திய தாக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே என் விழைவு.பொன்னியின் செல்வனில் வரும் இயற்கை வர்ணனை கற்பனை வலம் எல்லாம் என் தாயார் கூறக் கேட்டிருக்கிறேன். அனால் படிக்கும்பொழுது என்னமோ நானே தஞ்சை மண்ணில் நின்று பார்க்கும் காட்சி போன்று ஒரு நினைப்பு. கதாபாத்திரங்கள் நம்மைச்சுற்றி நடமாட விட்டு நம்மை கதைக்களத்தின் நடுவில் வைத்து விட்டார் கல்கி.
வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டரையர், குந்தவை, நந்தினி ஆகியோரின் படங்களை நான் முன்பு பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது படிக்கும்பொழுது படங்கள் இல்லாத குறையே தெரியாமல் நம் கற்பனையை தம் சொற்களால் நிரப்பிவிடுகிறார். கதையின் போக்கு எப்பொழுது எவ்விதம் மாறும் என்று துளியும் கணிக்க முடியாதவாறு ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. முடிவு எப்படியிருக்கும் என்று ஊகிக்கவும் நம்மால் முடியவில்லை. அவ்வளவு திறம்பல் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் ஞாயம் வழங்கவும் அவர் விரும்புவது நம்மை நெகிழ வைக்கிறது. துவக்கத்தில் பேயாக பிசாசாக சித்தரிக்கப்படும் நந்தினிகூட நம் அபிப்ராயத்தில் நல்ல ஒரு இடத்தைப் பிடிக்கிறார்.உலகத்தில் கேட்டவர்கள் யாரும் தமாக கேட்டவர்கள் இல்லை. சமுதாயமும் சூழ்நிலையும் ஒருவரை அவ்வாறு உருவாக்குகின்றது என்பதை நந்தினி மற்றும் பழுவேட்டரையர் ஆகியோர் பத்திரங்கள் மூலம் நிலை நிறுத்துகிறார் கல்கி.கதையை படித்து முடித்ததும் கதாபாத்திரங்களை விட்டு பிரிய மனமில்லாமல் திரும்பவும் நம் மனம் முதல் பக்கத்தை படிக்க தொடங்குகிறது.

Thursday, September 18, 2008

இரவின் மடியில் ....

விண்மீன்கள் கண்சிமிட்ட, வெண்ணிலவு நீந்தி விளையாடும் ஒரு இனிய (கரண்ட் கட்டான) மாலை நேரத்தில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருக்கும்போது நினைவுக்கு வந்தது ஒரு கேள்வி " What are your Turn Ons?"

உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் தங்களை உசுப்பி விடும் சக்தி பற்றி சிந்திக்க அவகாசமிருக்காது. இந்த இனிய இரவில் என்னை உசுப்பிவிட வேறெதுவும் தேவையில்லை. அமைதியான, தனிமையான வீட்டு மொட்டை மாடி, அருகில் என் அபிமான பாடகர்களின் அருமையான பழைய பாடல்கள், தூரத்தில் குழந்தைகளின் சிரிப்பொலி, போத்தநூரின் உறுத்தாத சில்லென்ற குளிர் காற்று . . . இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வேலை நிமித்தம் பலரை சந்திக்கும் எனக்கு சிலரை மட்டும் கண்டவுடன் பிடித்துவிடுகிறது. இங்கு என் Turn Ons என்னவென்று யோசித்தேன். எனக்கு முதலில் புலப்பட்டது கண்கள். ஆம் கண்கள் இதயத்தின் சாளரங்கள்தான். எத்தனை பேர் தங்களின் கண்களில் உண்மையை வைத்திருக்கின்றனர்? நேராக பாராமல் தாழ்ந்திருக்கும் கண்கள், மிரட்சியுடன் பார்க்கும் கண்கள், சந்தேகத்தை தேக்கியிருக்கும் கண்கள் இப்படித்தான் பெரும்பாலானவை இருக்கின்றன. கண்களில் உண்மையும் தைரியமும் நம்பிக்கையும் கொண்டுள்ளோர் மிகச் சிலரே.

அடுத்து சிரிப்பு. புன்சிரிப்பு. இதில் கண்ணும் இதழ்களும் முகத்தின் பிரகாசமும் ஒருசேர சிரிப்பவர் மிகவும் குறைவு. மனிதனை வெளிக்காட்டுவது முகத்தில் மலரும் சிரிபென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.

அடுத்தது குரல். நம்மில் பலருக்கும் குரலின் முக்கியத்துவம் தெரிவதில்லை. சிலர் இரட்டை குரலில் பேசுகின்றனர். சொந்தக் குரல் இதுவென்று இனம்காண முடியாமல் தவிக்கின்றனர்.

இதன் பின்னே வருவதுதான் நாம் கற்ற கல்வியும் பயின்ற பயிற்சிகளும். ஒரு சுய அறிமுகம் தருவது என்பது இப்பொழுது மனனம் செய்து ஒப்புவிக்கும் வாய்ப்பாடு போல ஆகிவிட்டது. சுயமாக தன்னை அறிந்து சொல்லும் தெளிவு பலரிடத்திலும் காணப்படுவதில்லை.

இதில் ஒருசிலர் மட்டும் விதிவிலக்காக தன்னம்பிக்கையுடன், நிமிர்ந்த நடையுடன், நேரான பார்வையுடன், முகத்தில் புன்சிரிப்புடன் நம் முன் வந்தமர்ந்து "Good morning. My name is .........." என்று பேசத் துவங்கும்போது அவர்களை முதல் பார்வையில் பிடித்து போவதில் வியப்பென்ன?

Sunday, August 10, 2008

சுப்பிரமணியபுரம்....

ஒரு பாட்டை கேட்டதும் இது ஒரு பழைய கதை என்று தெரிந்தது. ஸ்டெப்கட்டிங்கும் பெல் பாட்டம் பேண்டும் போட்டு ஒரு ஹீரோ. படம் நம்ம காலேஜ் கதை மாதிரி இருக்கும் என்று நினைத்தேன். முதல் பாதி முழுவதும் கதையில்லாத சம்பவங்களாக தோன்றியது. வேலை வெட்டியில்லாமல் சுற்றும் கிராமத்து இளசுகளின் கதை என்று நினைத்தேன். அனால் இடைவேளைக்குப் பிறகு நட்பு , காதல், நன்றி உணர்ச்சி, காட்டிக்கொடுத்தல், பழிவாங்குதல் என்று எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்துப் பிசைந்து ஒரு அருமையான கதைக் களத்தை நம் முன் வைக்கிறார் சசிக்குமார் . முற்றிலும் புது முகங்களாக இருக்க கதை நம்மை ஒரு முப்பது வருடம் பின்னோக்கி இழுக்கிறது. கண்கள் இருந்தால் பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. நல்ல படம். கேமரா கிராமத்தின் சந்துகளினூடே ஓடி விளையாடுகிறது. ஆரம்பத்தில் இருந்த நக்கலும் நையாண்டியும் காணாமல்போய், படம் ரத்தச் சிவப்பாக முடிகிறது.

Friday, August 8, 2008

சிரிப்பிற்கும் அர்த்தமுண்டோ?....

சென்ற சில நாட்களாகவே என் இனிய உறவுகளின் வருகை என்னை இன்பக் கடலில் ஆழ்திக்கொண்டிருக்கிறது. மேலும் நான் என் இளமைப் பருவத்தினை அசைபோட இந்த வரவுகள் உதவுகின்றன. நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆடிப் பாடி ஓடி விளையாடிய நாட்களை நினைக்கையில் மனமும் இளமையாகிறது. இப்பொழுது வந்திருப்பது மீனா, என் மாமன் மகள். அந்த நாட்களில் நாங்கள் நாட்கணக்கில் அரட்டை அடித்து, பாட்டுப் பாடி, சீட்டு விளையாடி, Dumb charade விளையாடி, கும்பலாக ஊர்சுற்றிய நாட்களை நினைவு கூர்ந்தோம். எனக்கு ஹிந்திப் பாடல்களின் வரிகளை அவள் எழுதித்தர நான் அவற்றைப் பாடுவேன். நான் அனு, மீனா, லக்ஷ்மி, சீதாலக்ஷ்மி என்று கூட்டு சேர்ந்து night rounds போனால் இரவு லேட்டாக வீடு திரும்பி பெரியவர்களிடம் பாட்டு வாங்குவோம். போத்தநூரின் நடுங்கும் குளிரில் பெண் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இப்படி இரவு நேரத்தில் வெளியில் போகாதே என்று எத்தனை முறை படித்து படித்து சொல்லியிருக்கிறேன் - இது அப்பா, இப்படி பெண்களை வெளியில் கூட்டிண்டு போய் அவாளை காத்து கருப்பு அடிச்சா பெத்தவாளுக்கு யாரு பதில் சொல்லறதாம் - இது அம்மா, இப்படி எல்லார் வாயிலும் விழுந்தாலும் எங்கள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆண்பிள்ளைகள் சேர்ந்தால் டீம் பிரித்துக் கொண்டு கிரிக்கெட், பேட்மின்டன் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, தண்ணீர் தொட்டியில் இறங்கி நின்று கூட்டமாகக் குளிப்பது என்று இருப்போம். பெரியவர்கள் எப்பொழுதும் தங்கள் பாட்டை பாடிக் கொண்டே இருப்பார்கள். எங்கள் காதுகள் அவற்றை வாங்கிக்கொண்டதே இல்லை. பிடித்த பாடல்களை உரக்கக் கத்திக் கொண்டு நடப்போம். எதிர்ப்படுவோர் எல்லாரும் எங்கள் கண்களில் தமாஷாகத் தெரிவார்கள். எங்கள் சிரிப்புக்குக் காரணம் தேவையில்லை. அப்பா ஒரு முறை " இவன், அதோ போறானே... அவன் கழுத்து மேல தலை... ம்பான். அதுக்கு இதுகள் எல்லாம் சிரிக்கும்... அர்த்தமே இல்லாம" என்று சொன்னார். நாங்கள் அதற்கும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம். சிரிப்பதற்கும் சந்தோஷப் படுவதற்கும் எங்களுக்கு என்றுமே அர்த்தம் தேவைப்பட்டதில்லை. இன்றுவரை.

Sunday, July 27, 2008

ஐயோ . . .

சொல்லி வாய் மூடவில்லை, அதற்குள் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு என்று செய்தி. அடுத்தது எங்கே என்ற கேள்வி மனதில் வந்து மோதுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, யாருமில்லாத பாலைவனச் சுடுகாட்டில் தன் வெற்றிக் கோடியை நாட்டத் துடிக்கிறது தீவிரவாதம். மனித உயிருக்கு விலையுமில்லை உத்திரவாதமும் இல்லை. மனித சுதந்திரம் பயத்தின் பின்னால் ஒளிந்து நின்று அழுகிறது. அரசாள்பவர்கள் நம்பிக்கை தரும் வகையில் ஒன்றும் சொல்வதில்லை. அடுக்கடுக்காக கொன்று குவிப்போர் அடுத்த இலக்கு எது என்று சொல்லவும் முடியாது. இந்நிலையில் தனி ஒருவன் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சி யாரிடம் அடைக்கலம் புகுவது?

Saturday, July 26, 2008

பயங்கரவாதம். . .

இப்பொழுதுதான் ஒரு வெடிகுண்டு அதிற்சியிலிருந்து மீண்டு திரும்பவும் சகஜ நிலைக்கு வருகிறது நம் வாழ்க்கை. அதற்குள் இன்னொரு அதிற்சியா? யாரை பழிவாங்க அல்லது யாரை பயமுறுத்த செய்யப்பட்டது? யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விளங்கவில்லை. ஏற்கனவே பெங்களூருக்கு வேலைக்கு போகும் பெண்களின் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். போதாதென்று இந்த சம்பவம் இனி எல்லோருடைய வயிற்றிலும் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான அன்னிய செலாவணியை ஈட்டுவதில் பெங்களூரின் பங்கு மகத்தானது. மறுக்க முடியாது. இங்கு வேலை பார்க்கும் தமிழர்களின் பங்களிப்பும் மகத்தானது. அதனையும் மறுக்க முடியாது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நம் மனதில் தோற்றுவிக்கும் பயம் நாளைய விடியலுக்கு ஒரு முட்டுக்கட்டையாகி விடும். ஏற்கனவே தொங்கிக் கொண்டு இரண்டும் கெட்டானாக இருக்கும், நம்முடைய I.T.தொழில், மேலும் சந்தேகத்திற்கு இடமாகி, நாளைய சமுதாயத்தின் முன் ஒரு பெரிய கேள்விக் குறியாக நின்று பயமுறுத்தும். இதில் ஐயமில்லை. சில அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களின் சேவை வேண்டாம் என்று சொல்வதும், சில இந்தியக் கம்பெனிகள் சீனர்களை இங்கே வேலைக்கு சேர்ப்பதும் நம் பயத்தை, சந்தேகத்தை அதிகமாக்குகின்றன. கூடவே பயங்கரவாதமும் சேர்ந்துகொண்டால்? நினைக்கவே திகிலாக இருக்கிறது. இந்தியர்களின் வேலைத் திறத்திலும், தரத்திலும் சந்தேகமில்லை. ஊதியமும் ரொம்பவும் அதிகமாக இல்லை. இருப்பினும் ஏனிந்தப் பின்னடைவு?

Wednesday, July 9, 2008

தோல்வி தோற்கட்டும்.

தோல்வி என்பது ஒரு இழப்பா? வாழ்கையில் தோல்வி என்பது உன்னை நீ அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு. தோல்வியுறாதவன் அந்த வாய்ப்பை இழந்தவனாகிறான். உன்னை நீ கூர்நோக்க உதவும் தோல்வியை வெறுக்காதே. விடாமுயற்சிக்குப் பல கதைகளைக் கேட்டிருப்பாய். தோல்வியில் துவளாமைக்கும் பல கதைகளுண்டு. இன்று தோற்பவன் நாளையும் தோற்பான் என்று பயப்படாதே. தோல்வி உன்னை மெருகேற்றும். தோல்வி உன் கண்திறக்கும். தோல்வி உன் வலிமையைக் கூட்டும். இறுதியில்தான் வெற்றி வரும். இது தோல்வியின் தோல்வியா? அப்படியென்றால் தோல்வி தோற்கட்டும்.

எதை இழந்தாய் நீ?

மனிதனுக்கு முதல் தேவை தன்னம்பிக்கை,
அதை இழக்காதவரை நீ எதையும் இழக்கவில்லை.
நீ எதையும் இழக்க முடியாது. முதலில் உன்னை நம்பு.
உன் கல்வி, அது நீ கற்றது.
உன் செல்வம், அது நீ சேர்த்தது.
உன் நாவன்மை அது உன் சொத்து.
உன் நம்பிக்கை, அது உன் கவசம்.
இதில் யார் எதைப் பறிக்க முடியும்?
உன் பயம் என்ன? உன் சந்தேகம் என்ன?
உடற்சோர்வு உன்னை வருத்துகிறதா, இல்லை
மனச்சோர்வு உன்னை துரத்துகிறதா? யோசித்துப்பார்.
சோர்வும் பயமும் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள்.
அவற்றை உதறித் தள்ளிவிடு. உற்சாகம் தேடி வரும்.
கவலை ஒரு பிணி. ஆறுதல் அதற்கு மருந்தாகாது.
கவலையை விட்டொழிப்பதே மருந்து.
இதையும் மீறி வருந்துகிறாயா ? வா, நானிருக்கிறேன்
தாயாய்த் தந்தையாய் உற்ற தோழனாய் நானிருக்கிறேன்.
கவலைகளை களைந்தெறிய மருத்துவனாய்
நற்றடத்தில் நடத்திட நல்லாசானாய் நானிருக்கிறேன்.
இனி கவலைகளைத் துறந்துவிட்டு
வாழ்கை கதவுகளைத் திறந்துவிடு.
ஆதவனின் ஒளிவேள்ளம்போல் வாழ்வு மலர்ந்திடும்.
காலைப்பனிபோல் துன்பம் கரைந்திடும்.
வண்ணமலர்ச் சோலையாய் இன்பம் சேர்ந்திடும்.
வாழ்த்துக்கள்.

கோவை பொலிவு பெறுகிறது.

சமீபத்தில் கோவையில் காணப்பட்ட ஒரு மாற்றம் , அதன் வானளாவிய விளம்பரப் பலகைகளின் நீக்கம். கோவைக்கு என்னவாயிற்று திடீரென்று? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இவற்றுக்கெல்லாம் பதில் தேடுவதை விடுத்து நடந்துவரும் மாற்றம் எந்த வகையில் நல்லது என்று பார்ப்போம். ஏற்கனவே பிளெக்ஸ் பிரிண்டிங் வந்த பின், விளம்பரப் பலகைகளின் அகல நீள உயரங்கள் எல்லாம் மிகவும் பெரிதாகி பயமுறுத்துகிறது. இதில் மொட்டை மாடிகள் ஏதும் தெரிந்தால், அதில் கட்டிவிடுகின்றனர் பெரிதாக ஒரு ஹோர்டிங். சினிமா விளம்பரங்கள், துணிக்கடை விளம்பரங்கள், செல்போன் கம்பெனி விளம்பரங்கள், இது தவிர கோவையின் முன்னணி மோட்டார் பம்புசெட் கம்பெனிகளின் விளம்பரங்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்றாக நின்று கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரத்தில் காட்சி தருகின்றன. பாதை ஓரங்களிலும் இவற்றின் பிரேம் பதிக்கப்பட்டு நடப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவது மட்டுமல்லாமல் இவை கட்டிடங்களின் அழகையும் கெடுக்கின்றன. இப்பொழுது விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களின் உச்சியில் எலும்புக்கூடாய் அவற்றின் பிரேம் மட்டும் நிற்பது ஒரு மாதிரி இருக்கிறது. இவ்வாறே சுவர் விளம்பரங்களும் ஒரு சுவரையும் வெள்ளையாக விட்டு வைப்பதில்லை. தனியார் வீட்டு காம்பவுண்டு சுவர்கள், கூட்ஷெட் ரோட்டிலுள்ள ரெயில்வே சுவர் என்று எங்கு பார்த்தாலும் வண்ணஜாலம்தான். சினிமா போஸ்டர்களும் ஒரு புறம் நாறடிக்கின்றன. தமிழ், ஆங்கிலம் என்று வகை வகையாக போஸ்டர்கள். ஒன்றை கழற்றினால் இன்னொன்றில் விளம்பரம். வானொலியில், தொலைக்காட்சியில், சுவரில் ஏன் ஆகாசதில்கூட விளம்பரங்கள் வந்தால் ஆச்சரியப் படாதீர்கள். இவ்வளவும் எதற்கு? மாசக் கடைசியில் கையில் காசு இல்லையென்றாலும் கடன் தர அட்டைகள்தாம் உள்ளனவே, அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் தேக்கி கடனாளியாவதற்குதான். இந்த பேனர்களை மட்டும் எடுத்தால் போதாது. பயனுள்ளதை பார்த்து, தேவையானவற்றை மட்டும் தேர்ந்து, அவசியமானதை மட்டும் வாங்கும் பக்குவத்தை பொதுமக்கள் நடுவில் பரப்பும் விழிப்புணர்வுதான் இன்றைய முதல் தேவை. சிந்திப்பார்களா விளம்பரம் செய்வோரும் அவற்றை நீக்குவோரும்?

Saturday, July 5, 2008

தேடுதல் நிற்காது

நேற்று என் ஆர்குட் ஹோம் பேஜில் கண்ட பெயர்களில் ஒவ்வொன்றாக தட்டி தேடியதில் ஒரு அரிய பொக்கிஷத்தைக் கண்டேன். கண்ட உடனே பிடித்து விட்டது . உடனே என் எண்ணத்தை ஸ்க்ராப் செய்தேன். திரு. லோகநாதனின் ஆல்பத்தில் நான் கண்டதெல்லாம் அற்புதமான படங்கள். புகைப்படக் கலையின்மீது எனக்குள்ள அளவற்ற ஆவலால் நான் மீண்டும் மீண்டும் அந்த ஆல்பத்தை திறந்து பார்கிறேன். நல்ல கேமரா மட்டும் ஒரு கலைஞனை உருவாக்க போதாது . நல்ல கண்ணும் , கருத்தும், தொழிலின் மீது ஆர்வமும், நம்பிக்கையும் , நல்ல ஈடுபாடும் , இடைவிடா முயற்சியுமே ஒரு புகைப்படக் கலைஞனை உருவாக்கும் என்பது திரு. லோகநாதன் அவர்களின் படங்களே பறைசாற்றுகின்றன. எப்படியும் இந்த கலைக் களஞ்சியத்தை பிடித்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நானிருக்கும் கோவையிலேயே இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டுமென்றால் , அது நான் பெற்ற பேறே.

Thursday, July 3, 2008

എങ്ങിനെയുണ്ട്‌ ആശാനെ?

എനിക്ക് മലയാളത്തില്‍ ബ്ലോഗ് എഴുതണമെന്നു ആഗ്രഹമുണ്ട് . പക്ഷെ ഞാന്‍ മലയാളം എഴുതി പഠിച്ചിട്ടില്ല . ആരെങ്ങിലും എനിക്ക് അക്ഷരങ്ങള്‍ എഴുതാന്‍ സഹായിച്ചാല്‍ ഞാന്‍ മലയാളത്തിലും എഴുതാന്‍ പഠിക്കാം . അതുവരെ എന്‍റെ എഴുത്തില്‍ തെറ്റ് പൊറുക്കണം . ഇതിനെ കുറിച്ചു ദയവായി കമന്റ്ടും എഴുതണം.
എന്ന്
മുത്തുരാമാസ്വാമി

Monday, June 30, 2008

அரற்றல் . . .

இரண்டு மூன்று நாட்களாகவே என்னவோ சரியில்லை . என்னவென்று சொல்ல முடியாத ஒன்று என்னை படுத்திக்கொண்டிருந்தது . ஒன்றுமில்லாததுக்கெல்லாம் கோபம் வருகிறது . எனக்கே என்னை பிடிக்காமல் போவதுபோல ஒரு கோபம். எதிர்படும் யாரும் கனிவாய் கேட்கும் கேள்விகளும்கூட என்னை எரிச்சலூட்டுகிறது . இந்த அவஸ்தையை என்னவென்று சொல்வது ? புரியவில்லை. நேற்று விடுமுறை. காலையில் கொஞ்சம் அதிக நேரம் தூங்கலாம்தான் . அனால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். எந்தக் காரணமுமின்றி நாராயணனை வைது, அடித்து விட்டேன் . பாவம் அவன் அழுதுகொண்டிருந்தான். திடீரென்று ஏதோ தோண வண்டியைக் கிளப்பி டவுனுக்கு சென்றுவிட்டேன். சென்ற இடங்களில் எல்லாம் ஏதோ ஒன்று என்னை நிற்க ஒட்டாமல் விரட்டியது. திரும்பவும் வீட்டுக்கு வந்தேன் . திரும்பவும் பழைய அவஸ்தை. குளிரடிப்பது போலவும் , உடம்பெல்லாம் வலிப்பது போலவும் இருந்தது. வாயு மாத்திரை அது இது என்று என்னென்னவோ முயன்று பார்த்து கடைசியாக புழக்கடைக்கு போய் அப்படியே வாந்திஎடுத்தேன் . கொஞ்சம் தெளிந்தது போல இருந்தது. வந்து படுத்துக்கொண்டேன். ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அரற்ற வைத்தது. சாதரணமாக ஐயோ அம்மா என்று அரற்றும் ஆளல்ல நான் . காய்ச்சல் வந்தால் எல்லோரையும் படுதிஎடுதுவிடுவேன் . எனக்கு தோன்றும் பழைய பாடல்களை உரக்க பாடுவதே என் அரற்றல் . மற்றவர்களை உறங்க விடாமல் கத்துவேன் . அப்படிதான் இன்றும் கத்தினேன். என்ன செய்வது ? நாளையாவது எல்லாம் தெளிந்து அலுவலகம் போனால் பரவாயில்லை.

Saturday, June 21, 2008

இருபது ஆண்டுகளின் இனிமை. . .

இன்றுடன் நான் மணமுடித்து இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . இந்த இருபது ஆண்டுகளில் நான் கண்ட , அனுபவித்த இல்லற இன்பம் வார்த்தைகளில் அடங்காது . இன்னும் பசுமையாய் , இன்னும் புதுமையாய் , இன்னும் இனிமையாய் என் இல்லறம் அமையக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? என் இல்லக் கிழத்தி , என் அகமுடையாள் , என் வாழ்வில் புகுந்து என்னை ஆட்கொண்ட நல்லாள் , இன்றும் தன் இளமையும் புதுமையும் மாறாமல் , இன்முகத்துடன் செய்யும் சேவைகள் சொல்லிலடங்கா .
இதுநாள் வரை நான் சோர்வு கண்டதில்லை அவளிடத்தில் . சுற்றத்தாரை அனுசரித்து அரவணைத்து ஆதரவு காட்டி அவள் இல்லம் நடத்தும் பாங்கு போற்றுதற்குரியது . துன்பம் சூழும் நேரத்தில் அவள் துணையாய் நின்று தோள் கொடுத்து , ஆதரவு கூறி , அறிவுரை கூறி ஒரு அருமையான தோழியாய் , அமைச்சாய் , அன்னையாய் பல நிலைகளில் இருந்து என்னை நிலை நிறுத்தியுள்ளாள் .

இந்த இருபது ஆண்டு இல்லறத்தில் , நான் இழந்தவை எதுவும் பெரிதாக இல்லை . மாறாக கற்ற பாடங்களும் , தேடிப் பெற்ற செல்வங்களும் ஏராளம் . உழைப்பின் வலிமையையும் , உறுதியையும் , நமக்கு உரியது எக்காலமும் கைகூடும் என்ற திண்மையையும் உணரப் பெற்றேன் . நல்லாசானாய் தந்தை வழிநடத்த , நற்றுணையாய் தாய் இருந்திட வாழ்வில் நற்றடம் பதித்திட வேறென்ன கேட்பேன் . பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் குறிப்பறிந்து நடந்தால் , பெற்றோர்கள் பிள்ளைகளின் உளமறிந்து உறுதுணையாக இருப்பர் . என் குடும்பத்தில் இதன் முழுமையை உணர்கிறேன் . என் பிள்ளைச் செல்வங்கள் தங்கள் துறைகளில் சிறந்து மேன்மை நிலையடைய உழைத்து , என் பெற்றோருக்கு என் நன்றிக்கடனைச் செலுத்துவேன். எனக்கு உறுதுணையாய் , என் நிழலாய் , என் மனைவி இருக்க , வாழ்வில் எந்த தூரமும் கடக்கக்கூடியதே , எந்த சுமையும் சுமக்கக்கூடியதே
, எந்த இலக்கும் எட்டக்கூடியதே , எல்லா வெற்றியும் ஈட்டக்கூடியதே

Sunday, June 15, 2008

தசாவதாரம் . . .

குருவியைப் பறக்க விடுங்கள் என்று எழுதியதும் , நிறையப்பேர் என்னிடம் "நீ எப்போ விஜய் ரசிகன் ஆனாய் " என்று கேட்டார்கள். நான் வெறும் ரசிகனாக இருந்து எழுதியது அது. யாருக்கும் ரசிகனாக அல்ல. இன்று நான் தசாவதாரம் பார்த்தேன். பலவிதமாக விளம்பரங்கள் வந்து நம் எதிர்பார்ப்பை உச்சத்துக்குக் கொண்டு போயிருக்கலாம். பலவிதமான விமர்சனங்கள் அவற்றை கீழே தள்ளியிருக்கலாம். ஆனால் கமலிடம் நாம் எப்பொழுதும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அதுதான் வித்தியாசமான படைப்பு. அதை நிறைவாகச் செய்திருக்கிறார் இந்த அற்புதப் படைப்பாளி .

வேறு எதிர்பார்ப்புகள் இன்றி , இது நல்லா இருக்காது என்ற முன்கணிப்பின்றி , இருப்பதை ரசிக்கலாம் என்று திறந்த கண்ணொடும் மனதோடும் தியேட்டருக்கு செல்வோர்க்கு நல்ல விருந்துதான் தசாவதாரம் . கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவ்வளவும் கமல் என்ற மனிதனின் மீதுள்ள காழ்ப்பினால் மட்டுமே என்பது படம் பார்த்தால் புரியும் . சீரான ஒரு வரிக் கதை . அதை சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் டைரக்டர் ரவிக்குமார். பல உப கதைகளும் அழகாகக் கோர்க்கப்படிருக்கின்றன. வெவ்வேறு வித்தியாசமான தோற்றங்களில் கமலின் திறமையும் உழைப்பும் வெளிவந்திருப்பது நிதர்சனம் .

ஒரு பெரிய படைப்பில் சிறு சறுக்கல்கள் இருந்தால் அதன் முழுமையை ஒன்றும் பாதித்துவிடாது. அப்படி சில சறுக்கல்கள் இருந்தால் (உதாரணம் : இன்ஸ்பெக்டர் பலராம் , ஹெளிக்காப்டரிலிருந்து பைனாக்குளர் மூலம் கிருமிகளை காண்பது ) அவற்றை ஒதுக்கிவிட்டு மற்றவற்றை ரசிக்கலாம். மாறாக மதத்தை தூஷிக்கிறார் , கடவுளை வெறுக்கிறார் என்பன போன்ற வாத விவாதங்களில் ஈடுபடுவது நன்றாக இல்லை.

பத்து கதாபாத்திரங்கள் வெவ்வேறு கெட்-அப்பில் மிகவும் நேர்த்தியாக அமைத்திருக்கின்றன . வில்லன் பிளெச்சர் , பாடகர் அவதார் சிங் , வைணவர் ரங்கராஜன் நம்பி என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் தன்மை குன்றாவண்ணம் செய்திருக்கிறார் கமல். பாராட்டுக்கள் . படப்பிடிப்பும் காட்சி அமைப்பும் கதையோடு இசைந்து கண்ணை உறுத்தாத வண்ணம் வந்திருக்கிறது . இசை . . . அதுமட்டும் பரவாயில்லை ரகம். ஸ்பெஷல் எபெக்ட் நன்றாகவும், சுனாமிக் காட்சிகளில் பிரும்மாண்டமாகவும் உள்ளது. "வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நாடாக இருக்கட்டும் " , " கடவுள் இல்லை என்று சொல்லவில்லை , இருந்தால் நன்றாக இருக்கும் " என்பன போன்ற சிந்தனைகளும் நிறைந்து மனித நேயத்தை நிறுத்துகின்றன . நாம் பார்க்கும் பார்வையில்தான் கடவுள் வேறுபடுகிறார். உண்மையாக , இன்மையாக என்று. அதுபோலத்தான் இந்தப்படமும் ரசிகனுக்கும் , விமர்சகனுக்கும் அவரவர் பார்வைபோல் நன்றாகவோ , இல்லாததாகவோ இருக்கும். நன்றி கமல் . இனி நீங்கள் சதாவதாரம் படையுங்கள்.

Sunday, June 8, 2008

என்னம்மா தோழி ....

இராமநாதன் புதிதாகக் கார் வாங்கியிருந்தார். அதை நான் ஒட்டிப் பார்க்க வேண்டும் என்று பிரியப்பட்டார் . நானும் என் அகமுடையாளுடன் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வரலாம் என்று புறப்பட்டேன் . ரேடியோவில் என்னமோ பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ரோட்டில் கவனம் இருந்ததால் பாட்டு மனதில் பதியவில்லை . வீட்டிற்க்கு வந்து நின்ற பின் " என்னம்மா தோழி " என்ற வார்த்தைகள் திடீரென்று என்னை "பொம்மையை காணோம் " என்று பாட வாய்த்தது. கூர்ந்து கவனித்தில் அது "என்னம்மா தோழி பொம்மையை காணோம் , நான் என்ன செய்யப்போறேன் " என்று முடிந்தது. உடனே என் அம்மாவை அழைத்து கேட்கச் செய்தேன் . அது அவர்கள் சிறு வயது முதல் பாடி வந்த பாடல் . அதன் முதலடியை யோசித்து தலையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தியிடம் அதைப் பாடிக் காண்பித்ததும் "சின்னச் சின்ன பொம்மை , இது சீருடைய பொம்மை " என்று முதலடியை எடுத்து தந்தார்கள்.

அடுத்த நாள் அலுவலகத்திலிருந்து வந்த என்னை ரெடியோவினருகில் ஓட்டிச் சென்றார் என் சித்தி . அதே பாடல்தான் படிக்கொண்டிருந்தது . கண்டிப்பாக எதாவது புதுப் படத்தில் இந்தப் பாட்டை சேர்த்திருப்பார்கள் . தேடிப் பிடிக்க வேண்டும் . அருமையான இசைப் பின்னணியுடன் அழகாகப் பாடப்பட்ட பாடல். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் .

Saturday, June 7, 2008

வீடு மாறும் வைபவம்......

ஒரு வீட்டை காலி செய்து புது வீட்டுக்கு குடிபெயர்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இதை நான் இன்று உணர்ந்தேன். என் மைத்துனரின் வீடு மாறும் வைபவம் இன்று நடந்தேறியது. அதிலிருந்து நான் கண்டறிந்ததுத்தான் மேற்கூறிய பொன்மொழி. முதலில் வீட்டுப் பொருட்களைப் பேக்கிங் பண்ணும் சடங்கு தொடங்கியது. தேவையான பொருட்கள் , தேவையற்ற பொருட்கள் என்று பிரித்து பெட்டிகளாக கட்ட வேண்டும் . ஒருவருக்குத் தேவையற்றதான பொருள் இன்னொருவரின் பொக்கிஷம் . ஒருவரின் தேவையான பொருள் இன்னொருவருக்குக் குப்பை. இதில் மத்தியஸ்தம் பண்ணி பெட்டிகளில் அடைத்து கட்டி வைக்க வேண்டும் . இதில் ஒவ்வொருவருடைய கமெண்டையும் கேட்க வேண்டுமே. புல்லரித்துவிடும் போங்கள். தேவையற்ற பொருட்களைத்தான் இத்தனை காலமும் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்ற உண்மை ஒதுக்கிய பொருட்களைப் பார்த்தால் தெரியும். சீனு சின்ன வயதாக இருக்கும்பொழுது வாங்கிய சமாச்சாரங்கள் அத்தனையும் இன்று சீண்டுவரின்றி இருந்தது. பழைய மரச் சாமான்கள் , அலங்காரப் பொருட்கள் , துணிக் கடையில் விளம்பரத்துக்காகக் கொடுத்த பைகள் , எதற்கு வாங்கினோம் என்று நினைவில்லாத பழைய புத்தகங்கள் , பட்டியல் நீண்டுகொண்டே போகும் . அத்தனை பொருட்களையும் பிரித்து வைத்து கட்டி வண்டியிலேற்றி புது வீட்டுக்கு கொண்டுசென்று இறக்கியாகிவிட்டது. இனி அடுத்த காமெடி அவற்றை புது வீட்டில் செட்டில் பண்ணுவதில் இருக்கிறது . பரவாயில்லை . அது நாளைதானே . பார்த்துக்கொள்ளலாம் .

Thursday, June 5, 2008

மறைந்திருக்கும் கலைஞன்......

மோகன், எனக்குத் தம்பி என்பதைவிட ஒரு நல்ல நண்பன் என்றே நான் என்றைக்கும் நினைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக கோவையின் வீதிகளில் சுற்றியதும் , கல்லூரிகளில் படியேறி இறங்கியதும், கிரிக்கெட் , பேட்மிண்டன் விளையாடியதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்ததும் ..... அவை மறக்க முடியாத நாட்கள்.
தன் வாழ்வில் ஒரு உன்னத இடத்தைப் பிடிக்கும் நோக்கு மோகனுக்கு என்றைக்கும் இருந்தது. பலவிதமான வியாபாரங்களில் , பலருடன் கூட்டு சேர்ந்து அவன் கண்டது அலைக்கழிப்பும் , பொருள் நஷ்டமும்தான். இவன் ஏன் இப்படி பணத்தை கொடுத்து ஏமாறுகிறான் என்று நான் வருந்தியதுண்டு. ஆனால் மோகனுக்கு ஏதேனும் ஒரு தொழிலில் நிலைத்து நின்று முன்னுக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
ஒரு முறை நான் பொருட்காட்சிக்கு போனபோது , அங்கு ஒரு ஸ்டாலில் மாஜிக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற போர்டை பார்த்தேன். கையிலிருந்த பணத்தில் சில சாமான்களை வங்கி வந்தேன். வீட்டில் வந்து செய்து காண்பித்ததில் பலருக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதில் மோகனும் ஒருவன். ஆனால் அவனுக்கிருந்த வியாபார நோக்கில் இதில் ஈடுபடுவான் என்று சிறிதும் நினைக்கவில்லை.
அடுத்த வருடம் அதே பொருட்காட்சியில் அந்தக் கடைக்காரருடன் சிநேகிதம் பிடித்து தொழிலுக்குள் புகுந்துவிட்டான் மோகன். கையிலிருந்த பணத்தை செலவு செய்து வழக்கம்போல் இதிலும் கையை சுட்டுக்கொண்டான். ஆனால் இந்தமுறை தொழிலை விட்டு ஓடவில்லை. பல இடத்தில் சுற்றித் திரிந்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டான். சிறிது சிறிதாக வியாபாரம் முன்னேறி இன்று தான் நினைத்த உன்னத இடத்தை பிடித்துவிட்டான். இன்று மோகன் ஒரு மாஜிக் வியாபாரி. தன்னிடம் வரும் மாஜிக் கலைஞர்களுக்கு தந்திரங்களை செய்து காட்டி அவர்களுக்கு விற்ப்பது தான் தொழில். அனால் அவன் மற்றவர்களுக்கு செய்து காண்பிக்கும் அழகைப் பார்க்கும்போது அவனுக்குள் ஒரு அரிய கலைஞனை ஒளித்து வைத்துள்ள விஷயம் புலப்படுகிறது. இதுவரை மேடையேறி ஒருமுறைகூட தன் திறைமையை மோகன் வெளிப்படுதியதில்லை. அனால் அவனிடம் வரும் கலைஞர்கள் அனைவருக்கும் தெரியும் இந்த கலைஞனை. அனாலும் மோகன் இன்னும் வியாபாரிதான்.

Thursday, May 29, 2008

குருவியைப் பறக்க விடுங்கள்.

சில நாட்களாகவே, குருவி படத்தையும் அதன் நாயகன் விஜயையும் கிண்டல் செய்யும் வண்ணம் மெசெஜுகளும் ச்க்ராப்புகளும் வந்து குவிகின்றன. யோசித்துப்பார்த்தால் இதனால் குருவி படத்திற்கு பெரியதொரு விளம்பரத்தைத் தேடித் தந்திருக்கின்றனர் "தலை"யின் ரசிகர்கள். ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை ஏற்றுத் தன் திறைமை முழுவதையும் பயன்படுத்தி ரசிகர்கள் ஏற்று இன்புறும் வண்ணம் திரையில் தருவதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறான். யாரும் விரும்பாத , வெறுக்கும் கதையை திரையில் வழங்கும் எண்ணம் அவனுக்கில்லை. இதுபோன்ற துவேஷங்களால் அவன் துவண்டு போவதுமில்லை.
படம் பிடிதிருப்பவர்கள் பார்க்கிறார்கள். பிடிக்காதவர்கள் சும்மா இருந்துவிட்டுப் போகலாமே? இது போல மண் வாரித் தூற்றும் எண்ணம் எதற்கு? சிவாஜி - MGR, ரஜினி - கமல் , போன்ற தமிழ்த் திரையில் தடம் பதித்த பெரும் நடிகர்கள் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. தங்கள் நாயகர்கள் படம் ரிலீசாகும் நேரம் , தோரணம் கட்டுவது, போஸ்டர் ஓட்டுவது, பால் அபிஷேகம் செய்வது என்று இம்சை இல்லாத வகையில் தங்கள் தலைவர்களைக் கொண்டாடினார்கள்.
நாம் ஆங்கிலப் படங்களில் வீர தீர சண்டைக் காட்சிகளைக் கண்டு பெரிதாகப் பாராட்டுகிறோம். ஆனால் அதையே நம் நாயகன் ஒருவன் செய்தால் கிண்டலடிக்கிறோம். தூம் ஹிந்தி படம் பார்த்து சிலாகிக்கிறோம் . ஆனால் தமிழ்ப் படத்தில் சாகசக் காட்சியை நையாண்டி செய்கிறோம். MGR நூறு பேரை அடித்து துவம்சம் செய்யவில்லையா ? ரஜினி ஆயிரம் பேரை ஊதித் தள்ளவில்லையா ? இதை எல்லாம் கலை என்று ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளோர் குருவியை மட்டும் பறக்க விடாமல் சிறகொடிப்பதேன்.

Sunday, May 25, 2008

கோடை(வை)யை குளிர்விக்க வந்த மழை...

இன்று மதிய உணவுக்கு வெளியில் செல்ல தயங்கியிருந்தேன் , காரணம் வெயில். சுட்டெரிக்கும் வெயிலில் சென்று சாப்பிடுவதைவிட பட்டினி கிடக்கலாம் என்று தோன்றியது. தயக்கத்துடன் வெளியில் வந்த நான் மேற்கே கரிய வானத்தைப் பார்த்ததும் இன்று மழை வந்தால் நல்லது என்று நினைத்துக்கொண்டேன். நினைத்த மாதிரியே வந்தது மழை . பெருமழை. வீதியெங்கும் ஆறாக நீர் ஓட, பார்க்கவே பரவசமாக இருந்தது.
வீட்டிற்கு வரும் வழியெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நஞ்சுண்டாபுரம் சாலையில் ஓரிடத்தில் டிராபிக் ஜாம். என்னவென்று பார்த்தால், சாக்கடை அடைப்பு. அடைத்துக்கொண்டிருந்தது பிளாஸ்டிக் கேரி பேக் ஒரு குவியலாக. எத்தனை நாளாக தேங்கியிருந்த குப்பையோ இன்று தன் வேலையை செய்துகொண்டிருந்தது. சாக்கடை நீர் வழிந்து சாலையில் குளம்போல் தேங்கி, நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல வழியின்றி நின்றிருந்தன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டும் என்று வாய் கிழியப் பேசுவோரும், சட்டம் போட்டுவிட்டு அதை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் காட்டுவோரும் இன்றும் இந்தச் சாலையில் சென்று வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
மழை பெய்துகொண்டிருந்தபோது வீசிய குளிர் காற்றையும் மீறி , மழை நின்றபின் பூமியின் வெப்பம் வெளிக்கிளம்பி முன்பைவிட உஷ்ணமாகத் தாக்கியது. இது கோடையின் இறுதி நாட்களாக இருக்கும். கோவைக்கு இனி மாரிக்காலம் குளிர்ந்ததாக இருக்கும். பிளாஸ்டிக் பைகளை குப்பையில் போடுவோரும் தங்கள் பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பர். இதற்க்கு முடிவு.....? கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. பூனையும் ரெடி . மணியும் ரெடி. கட்டுபவர்தான் (நாம்தான்) இன்னும் ரெடியாகவில்லை.

Friday, May 23, 2008

ஒரு அங்கீகாரம் தரும் ஊக்கம்.

சமீபத்தில் நான் எழுதிய 'மறதி எனும் மாமருந்து' எனும் வலைப் பதிவு தமிழ்மணம் . காம் அதனால் தெரிவு செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக எழுதத் தொடங்கும் என்போல் உள்ளோர்க்கு இந்த அங்கீகாரம் ஒரு ஊக்க பெருமருந்தாக உள்ளது. வழக்குத் தமிழில் எழுதும் எனக்கு தூய தமிழில் எழுத ஒரு தூண்டுகோலாக உள்ளது . என் எழுத்துக்களை யாரும் படிப்பார்களா , ஆதரவாக கருத்துச் சொல்வார்களா என்று ஏங்கிக்கிடந்த என் மனதுக்கு , கோடையின் வெப்பத்தில் வாடி நிற்கும் செடிக்குக் கிடைத்த மழைச் சுகம்போல் ஆறுதல் அளிக்கிறது. இந்த ஊக்கம் என்னை இன்னும் ஆயிரம் வலைப் பதிவுகள் பதிக்க வைக்கும் தன்மை கொண்டது. மேலும் எழுதுவதன் மூலமே என் நன்றியினை தெரிவிக்க முடியும். அதனால் மேலும் பல சிந்தனைகளை தேடிச் சேகரித்து பலரும் இன்புறும் வண்ணம் படைக்கப் புறப்பட்டுவிட்டேன் .

Tuesday, May 20, 2008

மறதி எனும் மாமருந்து.......

மறதி ..... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் - சிலருக்கு நோயாகவும் , சிலருக்கு வருத்தமாகவும், பலருக்கு கேலி பண்ண ஒரு சாக்காகவும் தெரிகிறது . எனக்கு எப்பொழுதுமே மறதி என்பது உடன் பிறந்த ஒரு குணமாக உள்ளது. சில நேரங்களில் அலைக்கழிப்பு , சில நேரங்களில் ரசித்து சிரிக்க வைக்கும் நிகழ்வுகள், வேறு சில தருணங்களில் என்னையே நான் கூர்ந்து நோக்கும் நிலை என பல அவதாரங்கள் கொண்டது என் மறதி. மற்றவர்கள் பார்வையில் என்னை அது விநோதப்படுதினாலும், எனக்கு என் மறதியை பிடித்திருக்கின்றது.

எண்களை   நினைவில் கொள்வது, முகங்களை மனதில் நிறுத்துவது, பெயர்களை அவற்றுக்கு சம்பந்தப்பட்ட பொருள்களுடன் இணைத்து நினைவில் நிறுத்துவது என்று பல பயிற்சிகள் செய்த போதிலும், என் மறதி ஒரு துளியும் முன்னேற்றம் காணவில்லை. என் அன்றாட வாழ்வில் மறதி பழக்கப்பட்டு விட்டதால் , நான் சில யுக்திகளை கையாண்டு சமாளித்துக்கொள்கிறேன் . உதாரணத்துக்கு, அலுவலகத்துக்கு புறப்படும் நேரம், ஒவ்வொரு பாக்கெட்டில் ஒவ்வொரு பொருள் என்று , என் பர்ஸ் , மொபைல் போன், வண்டி சாவி , கண்ணாடி , என ஒவ்வொரு பொருளையும் வைத்து கொள்கிறேன்.
சில நேரங்களில் என் மறதி எனக்கே புரியாத விதத்தில் என்னை திக்குமுக்காட வைத்துவிடும். இப்படித்தான் ஒரு நாள் என் சித்தப்பா , தன்னை கடையில் இறக்கி விட சொன்னார். நானும் அவரை பைக்கில் உட்கார வைத்து ஒட்டி சென்றேன். மழை தூரி கொண்டிருந்ததால் ஒரு ரெயின் கோட் அணிந்து சென்றேன் . சித்தப்பாவை இறக்கி விட்ட கையோடு அப்படியே அலுவலகம் வந்து விட்டேன். அலுவலகத்தில் வந்திறங்கி ரெயின் கோட்டை கழற்றியதும்தான் தெரிந்தது நான் சட்டை போடாத சமாசாரம். அன்றைக்கு பார்த்து என்னை பல புதிய மாணவர்களை நேர்முகம் கான சொன்னார்கள். நான் போட்டிருந்த டீ சர்டுடனே உட்கார்ந்துவிட்டேன். (பேண்ட் ? அதான் எப்பமே போடுவம்ல?). இடைவேளையின் போது பறந்தடித்து வீட்டுக்கு வந்து உடை மாற்றி சென்றேன்.
இவ்வளவு சிரமம் தந்தாலும், என்னால், என் மறதியினால், என் பழைய காயங்களை, இழப்புகளை, சோகங்களை , பரிகாசங்களை எல்லாம் தூரத்தில் தூக்கிஎறிந்துவிட்டு புதியதாக சாதனைகள் படைக்க முடிகிறது. எனக்கு மற்றவர் செய்த துரோகங்கள், காயங்கள் ஏதும் நினைவிற்கு வராது. எல்லாரையும் அப்பொழுது பார்க்கும் முகத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். எல்லாரையும் நல்லவர்களாய் பார்கிறேன். சோகம் என்னை தீண்டாது காக்கும் என் மறதியை நான் ஏன் மறுக்க வேண்டும்?

Friday, May 16, 2008

Joke's on you

Recently I recieved an Email, a forward from a friend. It was about a rickshaw ride in Delhi. The story is that two friends were going by an auto rickshaw. These youngsters amused themselves with a lot of 'Sardarji' jokes. The Auto driver, who happened to be a Sardarji, did not utter a word. At the end, when they paid for the ride, the auto driver gave them a Rupee each, asking them to give it to the first Sardarji beggar they met.

The two friends could never chance to see a single Sardarji who begged for alms. So they preserved the coin as mark of respect for Sardarjis who worked hard for their livelyhood, did anything to keep themselves up. Anything but begging.

This sort of jokes on another community is common world wide. In India Sardarjis are made fun of. In Tamilnadu we call Andra people 'Goltis'. In keral the word 'Thamizhan' is synonymous to fools. In Andra 'Aravadu' is a less intellect fellow and so on...

In Australia, the aborigins , in England, the Irish, in other European countries, the Polish, in the US, the Negros and we find this 'man teasing man' is prevelant everywhere. But What makes one feel a member of another community is inferior is quite debatable. We have never given a thought to the fact that India and its integrity is guarded more by those in the bordering states. The Punjabis have borne the brunt more than those in the interior. The Negros have lent their toil to make America what it is today. But pulling their legs continues . Why should anybody call themselves cultured, when they cant see a fellow human being as an equal to themselves?

Sunday, May 11, 2008

பரீட்சை (முடிவு) ஜுரம்.

இது பரீட்சை முடிவுகள் வெளியாகும் நேரம் . சாதாரணமாக எல்லோரும் தங்கள் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் நாட்கள். முழுப் பரீட்சை முடிந்து விடுமுறையைக் கழிக்க ஊருக்குச் சென்றாலும் , விடுமுறையை எத்தனை இன்பமாகக் கழித்தாலும், இந்த ஜுரம் எப்படியும் தொற்றிக் கொள்ளும். நல்ல மார்க் எடுத்து பாசாகும் படிப்பிஸ்டுகளுக்கும் , என்னை மாதிரி காலத்தின் கொடுமையால் பாசாகும் மக்குகளுக்கும் ஒரே மாதிரி இந்த ஜுரம் வந்து படுத்தும். நல்ல மார்க் வாங்கினால், நான் நன்றாகப் படித்தேன். மார்க்கு கம்மியானால் , ரொம்ப ஸ்ட்ரிக்ட் கரெக்ஷன் என்று சாக்கு. இப்படி சமயத்துக்கு தக்கவாறு பதில் ரெடியாக இருக்கும். ஆனால் ரிசல்ட் வந்து அடுத்த நாளே ஜுரம் போய் விடும் , ரிசல்ட் எப்படி இருந்தாலும். இப்பொழுது போல முன்னமேயே பள்ளிக்கு வந்து புக்ஸ் , யுனிபாரம் வாங்கும் அவஸ்தை இல்லை. அதனால் ஸ்கூல் திறந்த பின்புதான் ஊரிலிருந்தே வருவோம். அதுவரை கொண்டாட்டம்தான் . அடுத்த கால் பரீட்சை வரும்போழுதுதான் திரும்ப ஜுரம்.

இன்று முழுப் பரீட்சை லீவுக்கு யாரும் ஊருக்குப் போவதில்லை. அப்படியே போனாலும் பத்து நாட்கள் கூட சந்தோஷமாக இருக்க முடியாது. அதற்குள் ரிசல்ட், புக்ஸ், யூனிபார்ம் , டியூஷன் அல்லது கோச்சிங் கிளாஸ் இப்படி பல டென்ஷன் சமாசாரங்களும் கூடவே வந்து பயமுறுத்தும். இதில் எங்கே லீவை என்ஜாய் பண்ணுவது. மார்க்கு சுமாராக வாங்கும் மக்கள் தப்பித்தார்கள். பாஸ் ஆனால் சந்தோஷம்தான். இந்த படிபிஸ்ட் ஜாதி தான் பாவம். 91 க்கும் , 91.1 க்கும் இடையில் போராட்டம். மார்க் கம்மியனால் திரும்பவும் படித்து பரீட்சை எழுத வேண்டும். அப்புறம் மேல்படிப்புக்கு இடம் பிடிக்க அப்பாவை விரட்ட வேண்டும். அதிலும் நமக்குப் பிடித்த காலேஜில் இடம் கிடைக்க வேண்டும், நம் நண்பர்களும் அதே காலேஜில் சேர வேண்டும் . இப்படி பல தொந்தரவுகள். நண்பர்கள் வேறு காலேஜில் சேர்ந்துவிட்டால் நமக்கு நரகம்தான். அப்புறம் வேலை தேடும் படலம். எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. SSLC முடிந்தால் முக்கால்வாசி ஜனம் டைப் ஷார்ட்ஹேண்ட் படிக்க போய் விடுவார்கள் . காலேஜ் போவது மிகச் சிலரே. அப்படியே போனாலும், ஹிஸ்டரி , காமர்ஸ் , எகனாமிக்ஸ் என்று எது கிடைத்தாலும் படிப்பார்கள் . இன்று நண்பர்கள் எதில் சேர்கிறார்களோ அதுதான் நல்ல படிப்பு. சேர்ந்த பிறகுதான் தெரியும் அதன் கஷ்ட்டம்.
எனக்குத் தெரிந்த பையனுக்கு ஒரு பிரச்சனை. 10th பெயில் ஆனால் டுடோரியல்ல சேர்ந்துடுவேன். பாஸ் பண்ணினா என்ன பண்ணறது ? பிளஸ் டூ சேர்வதா இல்லை டிப்ளமா சேர்வதா ? ஒரே குழப்பம். எப்படிப்பட்ட இமாலயப் பிரச்சனை ? இதற்கெல்லாம் நல்ல தீர்வு , படிப்பதெல்லாம் படியுங்கள். ஆனால் பரிட்சையே வேண்டாம். எப்படி என் ஐடியா ?

Sunday, May 4, 2008

Reunion

In Thamizh, there is a phrase "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ", meaning, that words fail when lost souls find themselves after a long time. But I feel this has to be viewed in a different perspective. Recently it happened in my family. Two dear sisters (my Mom and Aunt), who were so close and intimate were split due to a trivial issue that flared up into a family feud. Now a common issue brought about a situation that my Aunt should come home to us. Initial reluctance was overcome. We secretly wished there would be no fireworks now. Every soul in the family had given their try at reconciliaton earlier. Now we were eager to see these two back to their old friendly forms. The day came and my aunt arrived. My Mom greeted her. They were talking of all things, but something was really missing. Each had a complex feeling of uneasiness of the distance that prevailed between them. They both were assuming that the other would not accept wholeheartedly. Now having come this far, I sincerely feel they talk out the main issue amicably and see that the matters are done straight. But as I said, words fail. There is uneasiness in the air, but we are looking forward to the sisters run into each other and hug and shrug off the differences.
Pray to God this happens at the earliest and both the families be happy on the Reunion.

Wednesday, April 30, 2008

humanism

Accidents have become so common these days and I have been having my square share of it at regular intervals. Almost one major hit every year is the current record. Now my latest accident turned out to open my eyes towards humanism.
It happened in late February this year. The morning was as pleasant as it would always be in Coimbatore and I set out to a campus interview. The venue was Kongunadu Arts and Science College, The very same place wher I studied a quarter century back. So it was something special to me. I wore my best. Everything went well till I neared my office. At Sungam junction, I was cruising alongside a Maruti Esteem. Suddenly a group of people attempted to cross the road. So I slowed down. Then on seeing the car, the group backed out and I revved up again. Then it happened, the accident. One old man in the group, in the haste to cross the road, ran accross in front of the Maruti and came directly in front of me. I was left with neither time nor the space to avert him. I hit him square and fell flat on the road with my bike coming on me. I couldn't just realize what happened. Somebody picked up my bike. Somebody picked up my belongings. A group led me limping to the tea shop nearby. I felt a severe pain in my shoulder and my ribs, couldn't bear to open my eyes. I could hear a voice ordering to bring me some water. The person asked me to drink some water and said I will be alright. He asked if he could call somebody to accompany me to the hospital. After a long pause, I drank some water and looked at the man in front of me. I was shocked. GOD ! both his hands were severed from elbow. I just couldn't pick myself up in the situation. The man who consoled and encouraged me was a handicapped beggar. In my shock I was dumb.
When help arrived, I made it to the hospital and had an X-ray. The next day I was Bound in a plaster and wore braces for a month. Doctors advised me not to drive for two months.
Now, I am on my feet. Back to my routines and everytime I cross Sungam junction, my eyes will involuntarily search for the handicapped MAN. You never realize what humanism means till you have the real taste of it. I had it. Now I thank God for the accident.

Sunday, April 27, 2008

Magical Weekend......

When the phone rang , I was really frustraed and thought of silencing it. But when I saw the caller, I became very curious to what it might be. It was my friend and a leading magician in the state, Mr. Yona (short for Yoganathan). It was an invitation to join him in one of the country clubs. There was a get together hosted by an MNC and the magic show was a part of it. I couldnt resist the invitation. together with my cousin Mohan, I made a dash to the venue. It was a country club set at the foot hills of western ghat, not far from my place. Greenery all around and beautifull villas punctuating it.
The show began with his usual ' Chaplin act' and continued with a lot of items that involved the guests. The crowd was much delighted with the way things appeared and disappeared. For one with a keen interest in magic and knows all its secret, I was more interested in seeing how the performer stood to the situation. The way he managed the crowd so close and around him.
My interest in magic began ever since I saw small time performers do at my school. Later when I got the chance to really learn the tricks, my interests faded once I knew the secrets. But with a new trick, it once again popped up. Now having known the secrets, my attention goes towards the presentaion. Every performer has his own style. So the same trick is delivered in different ways by each performer depending on how imaginative and innovative they are. Now it was this great person who has bagged several national awards for stage and close-up performance. There was one last act, which he had choreographed and was rehersing for an international competetion. After he called someone from the audience, he made him do the act following his instructions. He made the man scissor through his handkerchief and made him look miserable at the damage he did to his own belonging. Later the particaipant was presented with a new one instead. Then Yona climbed on to a bench and raised a cloth in front of him and instantly dropped it. To everyone's amazement, the magician had disappeared. Wow ... what a show. The secret is simple. But consider his age and an open air theatre, the speed with which he enacted the vanishing act was superb. Sure enough, secrets are the root of magic. But that is not just all. Practice and dedication bring fantastic reults. And this was another testimony to it.

Wednesday, April 23, 2008

பத்து பைசாவில் பளபள.....

இன்று ராதா சித்தியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்கள். "எங்க அம்மா எங்கிட்ட பத்து பைசாவும் ஒரு மஞ்சப் பையும் கொடுதனுப்புவா. பத்து பைசாவுக்கு ஒரு படி உமி வாங்கிண்டு வருவேன். அதை நன்னா கருக்கி ஒரு டப்பாவில் அடைத்து வைப்பா. ஒரு மாசம் பூரா அந்த குடும்பம் அத்தனை பேரும் அதை எடுத்துதான் பல் தெய்ப்போம். அம்மா போனப்புறம் உமிக்கரியும் போயிடுத்து". உண்மையான வார்த்தை. இன்று எங்கள் வீட்டில் டூத் பேஸ்ட் மட்டும் நாலு அல்லது ஐந்து டியூப் செலவாகும். அத்தனை பெரிய குடும்பம். இது போல இன்னும் எத்தனை புது செலவுகள் யோசித்துப் பார்க்க வேண்டும். தவிர்க்க முடிந்த செலவுகள் தவிர்க்க முடியாத செலவுகள் என்னென்ன என்று ஒரு லிஸ்ட் போட வேண்டும்.

Monday, April 21, 2008

இனிய அனுபவம்.

கால இயந்திரத்தில் ஏறி ஒரு ஐம்பத்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஒரு இனிய அனுபவம் இன்று எனக்கு வாய்த்தது. பழனியிலிருந்து சற்று தூரத்தில் உள்ளது கலையம்புத்தூர் அக்ரகாரம். இன்று காலை நான் சென்று இறங்கிய போது அந்த கிராமம் அப்பொழுதுதான் துயில் எழுந்ததுபோல் இருந்தது. ஒரே ஒரு தெரு. இரண்டு பக்கமும் வீடுகள். இன்னும் பழைமை மாறாமல் அப்படியே இருந்தது கிராமம். வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீட்டுத் திண்ணையில் பெரியவர்கள் பேப்பர் படிக்க சிறுவர்கள் சந்தியாவந்தனம் செய்யும் காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. வீட்டின் படிப்புரைகள் தாழ்ந்து உள்ளிருக்கும் உலகத்தை மறைத்து நின்றது. வீதியின் கோடியில் ஒரு கோவில், ஒரு பஜனை மடம், ஒரு சமூகக் கூடம் இருந்தது. நான் சென்றது குழந்தை லட்சுமியின் ஆண்டு நிறைவுக்கு. சமூகக் கூடத்தில் அந்த நிகழ்ச்சி . அந்த ஊரின் அழகில் லயித்த நான் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் ஆவலில் பூட்டியிருக்கும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் நெடுநேரம் அமர்ந்து கிராமத்தின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினேன். திடீரென்று அங்கு தோன்றிய மாப்பிள்ளை வெங்கடேஷ் வீட்டைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். நான் நினைத்தது போலவே வீடு விஸ்தாரமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு நடை. அதைத் தாண்டி ஒரு பெரிய ஹால். நடுவில் ஊஞ்சல். அதன் பின்னால் சமையலறை புழைக்கடை என்று என் கனவில் வரும் கிராமத்து வீடு. நகரின் ஆளரவத்தில் பழகிய எனக்கு இந்த அமைதி பிடித்துப் போனதில் வியப்பில்லை. இது போல ஒரு சாதாரண, அமைதியான, அழகான கிராமத்தில் வாழும் மக்களைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமை தலைதூக்குகிறது. என்றாவது நானும் இதுபோல் அமைதி தேடி வந்துவிட வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.

Friday, April 18, 2008

நினைவுகள்.

பழைமையை நினைவுகூர்வது பழைமையை நோக்கி இழுத்துச்செல்லும் சதியல்ல. அது மறந்த நாட்களை அசை போடும் ஒரு இன்பப் பயிற்சி. அவ்வளவுதான். சரி, தொடங்கிய விஷயத்திற்கு வருவோம். இதுவும் அதுதான். பழைய நினைவுகள். இப்பொழுது சம்மர் வெக்கேஷன் தொடங்கும் சமயம். எங்கள் வீட்டில் திருவிழா கோலம் பூணும் நேரம். முன்பு சென்னையை காலி செய்து சொந்தங்கள் தங்கள் சுற்றம் சூழ எங்கள் வீட்டில் வேடந்தாங்கல் பறவைகள் போல பறந்து வந்து இன்புற்ற நாட்கள் அவை. எங்கள் கூட்டுக் குடும்பத்தின் இன்ப நாட்கள். பெரியவர், சிறியவர் என்று முப்பதுக்கும் மேற்ப்பட்டோர் கூடி மகிழ்ந்த இனிய நாட்கள். இந்த ஆண்டு விடுமுறையின் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்போம் அன்று. வீட்டில் பெண்கள் குடும்ப வேறுபாடின்றி அனைவரையும் உபசரித்தனர். குழந்தைகள் தங்கள் இஷ்டம்போல் கத்திக் கூச்சலிட்டு விளையாடி மகிழ்ந்திருந்தோம். படுக்கப் பாயும் தலையணையும் போதாமல் நாங்கள் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தோம். எதிலும் என்னது உன்னது என்று பாகுபாடு பார்த்ததில்லை. நான் குழந்தைகளில் பெரியவனாதலால் 'சட்டாம்பிள்ளை' போல எல்லோரையும் நடத்தினேன். கூட்டமாக குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, உறங்குவது என்று ஒவ்வொன்றையும் ரசிக்க முடிந்தது. ஹூம்.....
இன்று .... பத்திரிகை வைத்து அழைத்தாலும் யாருக்கும் ஆண்டு இறுதி விடுமுறைக்கு ஊருக்கு வர நேரமில்லை, வசதியில்லை, சூழ்நிலையில்லை. பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தால் சம்மர் கோச்சிங் கேம்ப் அல்லது அடுத்த வருஷத்திய பாடச் சுமையை சுமக்க பிள்ளைகளை அனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி தீவாக நின்று மற்றவர்களைப் பார்க்கும் அவலம். 'ஐயோ.. அவனுக்கு இப்பவே டென்த் போர்ஷன் எடுக்க ஆரம்பிச்சுட்டா' , ' பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க இருவத்தி நாலு மணிநேரமும் படிக்கணும்' , ' ஸ்விம்மிங் கிளாஸ் யோகா கிளாஸ் அது இதுன்னு அவ அப்படி பிசியா இருக்கா. எங்க ஊருக்கு வர்றது? ' இப்படி எதோ ஒரு காரணம் காட்டி தட்டிக்கழிக்கத்தான் முடிகிறது நம்மால். மாறிவரும் சூழ்நிலையை குற்றம் சொல்லிப் பயனில்லை. தெரியும்தான். ஆனால் அதற்காக உறவுகளை உதறிவிட்டுவிட வேண்டும் என்ற அர்த்தமில்லையே. இன்றுள்ள ஒற்றைப் பிள்ளை குடும்பங்களில் உறவுகளைப் புரிந்துகொள்ள முனைவோர் இல்லை. காலத்தின் கட்டாயம், வேலை நிமித்தம் என்று கூறுகளாகத் துண்டுகளாக பெரியவர்களை 'ஹோமில்' சேர்த்துவிட்டு குழந்திகளை 'ஹாஸ்டலில்' விட்டு நாமும் தனித் தீவாக வலம் வந்து என்னத்தை கண்டோம்?
கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் தீர்வுகளும் இருந்தன. விட்டுக்கொடுத்தல், பகிர்ந்துகொள்ளுதல், பெரியவருக்குக் கீழ்படிதல் என்று பல நல்ல விஷயங்கள் அதில் நிறைதிருந்தன. ஆனால் இன்று அதை எல்லாம் மற்றவருக்காக தியாகம் செய்கிறோம் என்ற கண்ணோட்டம்தான் உள்ளது. அன்று யாரும் 'மற்றவர்' என்று இருக்கவில்லை. எல்லோரும் நம்மவர், நாம் என்ற ஒரு நோக்கு இருந்தது. இன்றைய சூழல் இத்தனை ஒரு இழப்பாக பார்கவில்லையா? இல்லை என்றால் இந்த சமுதாயம் கண் திறக்கவில்லை, உறங்குகிறது. அதனை எழுப்பும் முயற்சியில் சற்றும் மனம் தளராத 'அம்புலி மாமா' விக்ரமன் போலத் திரும்பத் திரும்ப வந்து உருத்துவேன்.

Thursday, April 17, 2008

ஊக்க மருந்து...

நோண்டல். இது எனக்கு பிடித்தமான ஒன்று. எந்த ஒரு பொருளையும் நான் அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை. அதை திறந்து பார்த்து கற்றுக்கொள்ள என்மனசு துடிக்கும். இப்படித்தான் என் பெரியப்பா மாணிக்கத்தின் வீட்டில் இருந்த ஒரு பழைய கிராமபோன் என்னை ஈர்த்தது. அதை திறந்து பார்த்து அதன் மெக்கநிசத்தை கற்றுக்கொண்டேன். அதன் சவுண்ட் பாக்ஸ் எப்படி ஒரு சின்ன ஊசியிலிருந்து ஓசையை வாங்கி அதை பெரிதாக்கி கொடுக்கிறது என்று தெரிந்துகொண்டேன். இதற்கு என் பெரியப்பா தந்த ஊக்கம் என்னை ரேடியோ ரெக்கார்ட் பிளேயர் என பல்வேறு சமாசாரங்களை நோண்ட வைத்தது. ஒரு முறை சிதம்பரம் சித்தப்பா வீட்டில் ரேடியோ பழுதானபோது அதை 'ஐயப்பன் பார்த்து கொள்ளட்டும்' என விட்டு விட்டார். நானும் நோண்டி ஒரு வால்வை உடைத்து விட்டேன். பிறகு புதிய வால்வு வாங்கி போட்ட பிறகு பாடியது. எனக்கு புதுப்பாடம் கிடைத்தது. நோன்டும்போது கவனமாக இரு. எதையும் உடைக்காதே. இது தான் அந்த பாடம் . இன்றுவரை இதை நான் நினைவில் வைத்துள்ளேன். இன்று நான் ஒரு தேர்ந்த நோன்டியாவதற்கு இவர்கள் கொடுத்த ஊக்கம்தான் காரணம். இப்பொழுது கம்பியூட்டரின் வலை பின்னலில் புகுந்து விளையாட இந்த ஊக்கம்தான் என்னை நகர்த்துகிறது, நடத்துகிறது.

ஊர் கூடி தேர் இழுக்க ....

என் சிறு வயதில், எங்கள் வீட்டின் அருகில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் விழா எடுத்தால் பத்து நாட்கள் ரொம்பவும் விமரிசையாக நடக்கும். தினமும் சாயந்திரம் பூசாரி அக்னி சட்டியை கையில் எடுத்து கம்பத்தை சுற்றி ஆடுவார். பிறகு சிறப்பு பூஜைகள் எல்லாம் நடந்தேறும். ஊரில் யாராவது லோக்கல் வித்துவான் பாட்டு கச்சேரி நடக்கும். தினமும் எதாவது ஒரு சுவையான நிகழ்ச்சி இருக்கும். ஊர் மக்கள் எல்லோரும் பேசியம்மனுக்கு தாரளமாக செய்தனர். பத்துநாளும் கோவில் அடைத்து பந்தல் போட்டு தடபுடல் பண்ணுவாங்க . இப்போ நினைச்சாலும் இனிக்கிறது..
காலம் மாறும்போது அதற்கேற்ப காட்சிகளும் மாறின. முதலில் வெட்டுப்பட்டது லோக்கல் வித்துவான். அதற்கு பதிலாக வந்தது ஆர்கெஸ்ட்ரா. அடுத்தது கும்மி கோலாட்டம் இதற்கு பதில் சின்ன சைஸ் திரையில் பக்தி படங்கள். சின்ன புரோஜெக்டரில் ரீல் மாற்றுவது, அந்த இடைவேளையில் ஓடி போய் சீக்கிரமாய் சாப்பிட்டு விட்டு வருவது என்று ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும். பிறகு வந்தது வீடியோ காச்செட். படம் போடுபவரின் வேலை சுலபமயிற்று.
இன்றும் திரு விழா நக்கிறது. ஆனால் ஒன்றல்ல. பேச்சியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பன்னாரி மாரியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில், என்று பத்து தப்படிக்கு ஒரு கோவில். அனைத்திலும் ஒரு இளைஞர் அணி, தனி தனியாக வசூல், ஒரு ஆர்கெஸ்ட்ரா, ஒரு பட்டி மன்றம், யாராவது சினிமா பிரபலம் பங்குகொள்ளும் நிகழ்ச்சி, ஜோடிக்கப்பட்ட ரதம் இல்லை. அதற்கு பதில் ரெடி மேட் திண்டுக்கல் தேர். வாணவேடிக்கைக்கு ஒரு காண்டிராக்ட். ஒயில் கும்மி, லசீம் ஆட்டம் பொய்க்கால் குதிரை என்று களைகட்டும் ஊரில் இன்று ஒன் டே மேட்ச் மாதிரி மாரியம்மன் கோவில் விழா. என்னமோ மனசில் நெருடுகிறது.

Sunday, April 13, 2008

நான் எப்பொழுது எழுத தொடங்கினேன்

எனக்கு நாலு வயசிருக்கும். என்னை சிறந்த கல்வியாளனாக காணவேண்டும் என்ற கனவோடு பெரியப்பா மாணிக்கம் அவர்கள் என்னை தன் மடியிலிருத்தி ஒரு பெரிய தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதில் அகர முதல எழுத்துக்களை சொல்லி கொடுத்தார். அது முடிந்து ஆறு மாசத்தில் நான் அவருக்கு " My dear Big Father" என்று தொடங்கி ஒரு கடிதம் எழுதினேன். அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அதற்குப்பின் எழுதுவதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை. எட்டாவது வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு மலருக்கு ஒரு சிறுகதை எழுதினேன். ஊக்குவிப்போர் இல்லாத காரணத்தினால் எழுதுவதில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. இப்பொழுது ஒரு புது முயற்சியில் இறங்குக்றேன். எழுதலாம் என்று நினைத்து புதிதாக தலைப்புகளை யோசிக்கிறேன். என் துறை சார்ந்த சிந்தனைகளையும் மற்ற துறைகளை சார்ந்த கருத்துகளையும் இங்கே தருவது என் விருப்பம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

என் இனிய நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாகவும் அனைத்து நன்மைகளும் வளங்களும் சிறந்து மென்மேலும் செல்வம் கொழிக்க , வாழ்வு நலம் பெற , உடல் நலம் சிறந்திருக்க வாழ்த்துக்கள். வாழ்க வையகம் ...வாழ்க வளமுடன்.

Saturday, April 12, 2008

வணக்கம்.

வணக்கம்.
எழுத்துலகில் இது என் முதல் கன்னி முயற்சி. இதை ஊக்குவித்து பயனுள்ள அறிவுரைகள் தருமாறு வேண்டுகிறேன். உங்களுக்கு ருசிகரமாக இருக்கும் வகையில் இந்த தளத்தை உருவாக்க என் முயற்சிகள்.
நன்றி.

Vanakkam

Vanakkam,
This is only my maiden attempt in writing something. Hope you'll enjoy it. I would welcome comments and suggestions on how I can improve this space. So here I go...