Saturday, July 26, 2008

பயங்கரவாதம். . .

இப்பொழுதுதான் ஒரு வெடிகுண்டு அதிற்சியிலிருந்து மீண்டு திரும்பவும் சகஜ நிலைக்கு வருகிறது நம் வாழ்க்கை. அதற்குள் இன்னொரு அதிற்சியா? யாரை பழிவாங்க அல்லது யாரை பயமுறுத்த செய்யப்பட்டது? யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விளங்கவில்லை. ஏற்கனவே பெங்களூருக்கு வேலைக்கு போகும் பெண்களின் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். போதாதென்று இந்த சம்பவம் இனி எல்லோருடைய வயிற்றிலும் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான அன்னிய செலாவணியை ஈட்டுவதில் பெங்களூரின் பங்கு மகத்தானது. மறுக்க முடியாது. இங்கு வேலை பார்க்கும் தமிழர்களின் பங்களிப்பும் மகத்தானது. அதனையும் மறுக்க முடியாது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நம் மனதில் தோற்றுவிக்கும் பயம் நாளைய விடியலுக்கு ஒரு முட்டுக்கட்டையாகி விடும். ஏற்கனவே தொங்கிக் கொண்டு இரண்டும் கெட்டானாக இருக்கும், நம்முடைய I.T.தொழில், மேலும் சந்தேகத்திற்கு இடமாகி, நாளைய சமுதாயத்தின் முன் ஒரு பெரிய கேள்விக் குறியாக நின்று பயமுறுத்தும். இதில் ஐயமில்லை. சில அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களின் சேவை வேண்டாம் என்று சொல்வதும், சில இந்தியக் கம்பெனிகள் சீனர்களை இங்கே வேலைக்கு சேர்ப்பதும் நம் பயத்தை, சந்தேகத்தை அதிகமாக்குகின்றன. கூடவே பயங்கரவாதமும் சேர்ந்துகொண்டால்? நினைக்கவே திகிலாக இருக்கிறது. இந்தியர்களின் வேலைத் திறத்திலும், தரத்திலும் சந்தேகமில்லை. ஊதியமும் ரொம்பவும் அதிகமாக இல்லை. இருப்பினும் ஏனிந்தப் பின்னடைவு?

1 comment:

Anonymous said...

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பயங்கரவாதத்தை ....குண்டு போடும் பயங்கரவாதத்தை வேண்டுமானால் சட்டம் போட்டு .... போலீஸ் போட்டு தடுக்கலாம்.

ஆனா நாடுக்குள்ளேயே பெண்ணியம் (feminism) என்ற உள்பகை ... , உள்ளேயே இருக்கும் புற்று நோய் …. , பெண்ணிய (feminist) பயங்கரவாதம் கிளமியிருக்குதே... இதை என்னா செய்ய ?

இப்ப இந்திய உளவு ஸ்தாபனமேஇல்லை ஆடிப்போயி இருக்குது. மேல் விபரங்களுக்கு
http://batteredmale.blogspot.com/2008/08/blog-post_6091.html

அன்புடன்
விநாயக்