Sunday, April 3, 2011

உலகக் கோப்பை ...



உலகக் கோப்பையை நாம் திரும்பவும் வென்றுள்ளோம். முதலில் வென்ற பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அனைவரது எதிர்பார்ப்பும் . இந்தியா ஒன்றிரண்டு ரவுண்டு விளையாடுவார்கள். ஆனால் தினமும் நடு ராத்திரி வரை ரேடியோவை காதில் கட்டிக்கொண்டு கமெண்டரி கேட்பதும் , மற்ற நண்பர்களுடன் அடுத்த நாள் விஷயம் பரிமாறிக்கொள்வதும் வாடிக்கை. மற்றபடி கோப்பைக் கனவுகள் ஏதுமில்லை.கிரிக்கெட்டை நேசித்த காலமது. யார் நன்றாக விளையாடினாலும் பாராட்டத் தயங்காத நாள் .UMS வளாகத்தில் ஒரு Dish அமைத்து பெரிய திரையில் இறுதி ஆட்டம் காட்டுகிறார்கள் என்று ஓடிப் போனால் அங்கு புரொஜெக்டரை அட்ஜஸ்ட் பண்ணியே கழுதை அறுத்தார்கள்.திரும்பவும் ரேடியோவிடம் தஞ்சம். நடு ராத்திரி இந்தியா ஜெயித்ததை கொண்டாட சத்தம்போட்டுக்கொண்டு ஓடிய என்னை போலீஸ்காரர் மிரட்டி அனுப்பினார். "இந்தியா ஜெயித்தால் உனக்கென்னடா?" என்று திட்டு வேறே. சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள மொய்தீன் பாய்தான் கிடைத்தார்.
                      இன்று நிலைமை வேறு . எதிர்பார்ப்புகள் அதிகம் . பரிசுகள் அதிகம் . கொண்டாட்டங்கள் அதிகம் . கவரேஜ் அதிகம் . இப்படி எல்லவிததிளையும் நிலைமை மாறியிருக்கிறது. முதல உலகக் கோப்பையை கேட்டு சந்தோஷப்பட்ட நான் இன்று கண்டு களித்தேன் . அடுத்த முறை நேரில் காண உத்தேசம்.