Thursday, December 18, 2014

மஹா லக்ஷ்மி அஷ்டகம் :



நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹா லக்ஷ்மி நமோஸ்துதே.

நமஸ்தே கருடாரூடே கோலாசுர  பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹா லக்ஷ்மி நமோஸ்துதே .

சர்வஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே சதா தேவி மகாலட்சுமி நமோஸ்துதே .

ஆத்யந்த ரஹீதே தேவி ஆதி சக்தி மகேஸ்வரி
யோகஞே யோக சம்பூதே மகாலட்சுமி நமோஸ்துதே .

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரௌத்ரெ மஹா சக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே .

பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாதஹா மகாலட்சுமி நமோஸ்துதே .

சுவேதாம்பர தரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகன் மாதாஹ மகாலட்சுமி நமோஸ்துதே .

மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்ரம் யஹ்படேத பக்திமான் நரஹ
சர்வசித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா .

ஏக காலே படேநித்யம் மஹா பாப் விநாசனம்
தவி காலம் யஹ் படே நித்யம் தனதான்ய சமன் வித .

த்ரிகாலம் யஹ் படே நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மகாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா.

இதி இந்திர கிருதம் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டகம் ஸ்லோகம் சம்பூர்ணம் ..

Tuesday, December 9, 2014

முருகன் பாமாலை

முருகன் பாமாலை .

ஆதி மூல முருகா -முருகா  ஆதி தேவ முருகா .
ஞான பால முருகா - முருகா  ஞான தேவ முருகா
கோவில நாடி வந்தேன்  முருகா - குறைகள் தீர்க்க வருவாய் -உன்
மலையை நாடி வந்தேன் முருகா - மனமிரங்கி வருவாய் .- பல
படிகள் ஏறி வந்தேன் முருகா பரிவடைந்து வருவாய்
கிரியிலேறி வந்தேன் முருகா பெரிய வாழ்வு தருவாய்
கவிகள் படி வந்தேன் முருகா கருணை ஒன்று தருவாய் - பல
துதிகள் பாடி வந்தேன் முருகா துணைவனாகி வருவாய் .
மயில் அழைக்க வந்தேன் முருகா மனமகிழ்ந்து வருவாய் .
கொடியழைக்க வந்தேன் முருகா குணமறிந்து வருவாய் .
அடிமையாகி வந்தேன் முருகா அதிபனாகி வருவாய் .-உன்
அருமை கண்டு வந்தேன் முருகா அகமகிழ்ந்து வருவாய் .
வினைகள் நீங்க வந்தேன் முருகா வேவெடுது வருவாய் . -என்
பவமழிக்க வந்தேன் முருகா பதமளிக்க வருவாய் .
மது மணக்கும் மலரே முருகா மனமிருக்கும் ஒளியே .
அதிசயத்தின் உருவே முருகா அருண ஞான குருவே .
வேத நாத ஒளியே முருகா வேத போத முடிவே .
வேத போத முடிவே முருகா வேத கான வடிவே .
காலமற்ற கலையே முருகா கருவமற்ற நிலையே .
கனமயூர மணியே முருகா கௌரி தந்த கனியே.
அன்னை தந்தை ஆனாய் முருகா அரிய செல்வம் ஆனாய் .
என்னை ஆளும் முருகா - முருகா உன்னை என்றும் மறவேன் .
அன்பர் ஒங்க வேண்டும் முருகா அவனி ஒங்க வேண்டும் .
துன்பம் நீங்க வேண்டும் முருகா இன்பம் ஒங்க வேண்டும் .
தர்மம் ஒங்க வேண்டும் முருகா தானம் ஒங்க வேண்டும் .
தவமும் ஒங்க வேண்டும் முருகா சாந்தி ஒங்க வேண்டும் .
பக்தி ஒங்க வேண்டும் முருகா சக்தி ஒங்க வேண்டும் .
சக்தி  ஒங்க வேண்டும் முருகா சித்தி ஒங்க வேண்டும் .
அன்பர் கூட வேண்டும் முருகா துதிகள் பாட வேண்டும் .
துதிகள் பாட வேண்டும் முருகா நீயும் ஆட வேண்டும் .
மயிலும் ஆட வேண்டும் சேவல் கொடியும் ஆட வேண்டும் .
அயிலும் ஆட வேண்டும் முருகா அரவம் ஆட வேண்டும் .
உமையும் ஆட வேண்டும் முருகா உலகம் ஆட வேண்டும் .
தமையன் ஆட வேண்டும் உனது தந்தை ஆட வேண்டும்
ஞான ஜோதி மயமே எங்கும் நாம கீதா மயமே .
நாம கீதா மயமே எங்கும் முருகன் நாம மயமே .

அரோஹர........

Saturday, December 6, 2014

விண்கொண்ட தேவர்கள் போற்றிப் பணிந்திடும்

விண்கொண்ட  தேவர்கள்  போற்றிப் பணிந்திடும் 

விண்கொண்ட தேவர்கள் போற்றிப் பணிந்திடும் மெய்ப்பொருளே கலியுக வரதா
பண்கொண்ட செந்தமிழ் தோத்திரம் பாடியே பணிந்தனம் ஆண்டருள்வாய் நீ சதா .
ஐயப்பா உன்போல் தெய்வம் அவனியில் இல்லையப்பா , அதிசயப் பிறவியப்பா அருள்தரும் பிள்ளையப்பா .
அமரர்களும் புலியாய்  ஆனார் உமக்கப்பா , ஹரிஹரன் உமக்கம்மை அப்பனுமப்பா

இருமுடி தாங்கியே மாமலை ஏறி வந்து ஈஸ்வரனே உந்தன் காட்சி கண்டோர்
கரும வினை அகன்றே நலம் எய்திட காண்பதன்றோ  , சந்தேகமுண்டோ

சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏறி  வரும் சதமக பதவிகொள் தேவேந்திரன்
சித்தம் மகிழ்ந்தவன் செய் தவ பாக்யதினால் சிம்ஹ வாகனமாகி உனைச் சுமந்தான் .

அன்புடன் மாலை அணிந்துனை போற்றிடும் ஐயப்பன் மாரெல்லாம் நீயே அன்றோ .
துன்பம் தவிர்த்து  எனை ஆண்டருள்வாய் இன்னும் சோதனை ஏனுனக்கு  இது நன்றோ .

அம்புவி மாருதம் வென்புனல் தீயும் நீ . அண்ட சராசரம் யாவையும் நீ
ஆய அப்பனும் குரு தெய்வமும் , வேத புராண கலைகளும் அறிவனும் நீ
கூறும் மெஞ்ஞானிகள் உள்ளமே கோயிலாய் கொண்டவனே வருவாய்  தருணம்
ஆறும் கடந்த பிரகாச பிரம்மானந்த ஐயப்ப ஸ்வாமி பொன்னடி சரணம்
சரணம் ஐயப்பா , ஐயப்பா சரணம் என்று ஓதும் உனைச் சார்ந்தோர் தரணியில் உயர்ந்தோர்
 காசினில் துயரப்பா கடிதினில்  தீரப்பா , கலியுக மெய்யப்பா துய்யனே ஐயப்பா .



ஸ்ரீ ஐயப்பன் பஞ்சரத்தின மாலை 


கருணாகரக் கடவுள் அரனாரிடம் சென்று சூர்பகாசுரன் தவமிருந்து
கை வைத்தபேர் சிரசு துய்ய நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம் குருவாம் அரன் சிரசில் அவன் கரம் வைதிடச் சென்றடுத்தான்
வள்ளல் அய்யன் ஐவரளிக் காய்தனில் ஒளிந்ததை மால் அறிந்தோடி வந்து
சரச மோகினியாகி அசுரனை நீறாக்கி சம்புவை அணைந்து பெற்ற
சந்ததிப் பொருளாகி வந்த கண்மணியே  என் சங்கடம் தீருமையா .

சரணம் ஐயப்பா என்றுருகும் அன்பர்க்கு நீர் சகல சாம்ராஜ்யம் அருளும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரம சத்தான மெய்ஞான குருவே .

                                         ..........................................ஸ்வாமியே சரணம் ஐயப்பா .

பண்டு காலாஸ்ய பதி கொண்ட மீனாக்ஷி நிஜ பக்தனாம் உக்ரபாண்டியன்
பாலகன் வேண்டுமென்று ஈசனாம் சம்புவை பிரார்த்தித்து அனேக வரமும்
கொண்டு மனமகிழ் பூபன் அண்டையில் மால் அரன் மனம் இசைய மூர்த்தியாகி
குமரவேஷத்தினால் அவரை மோகம் செய்து கொஞ்சிடத் தஞ்சமென்று
தொண்டு செய்கின்ற நாளன்று கள்வர்களாம் துஷ்டரை நிக்ரஹித்த
தீரனே , தீன பரிபாலனே நீ எனதுள துயரமெல்லாம் அகற்றும் .

சண்டப் பிரசண்ட உத்தண்ட கோதண்ட தர்ம சாஸ்த்ரையனென்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம சத்தான மெய்ஞான குருவே.
                                         .................ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பச்சை நிறம் மெச்சுமொரு நற்புரவி மீதினில் சவாரி வரும் தீரன் என்றும்
கண்டிருக்கின்றதொரு  தொண்டருக்காகவே காலினில் விலங்கு பூட்டி
துட்ஷணம் செய்யாமல் யக்ஷியை இருத்தியும் சொல்வாரிது கேட்க வைத்த
தொண்டிமை ஆகுமென் துயர் தீர்த்து அனுகிரஹம் உறுதியாய்ச்  செய்யுமையா
சச்சிதானந்த ஹரி சங்கரானந்த ஜெய சம்மோஹனாங்கன் என்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞான் குருவே
                                                              ........................ஸ்வாமியே சரணம் ஐயப்பா .

மாயானுபூதியால் யானுமுந்தன் பதம் மறந்திருந்தேன் இதுவரை
மற்றொருவர் இல்லையே இத்தரணி மீதிலென் வம்ச வழியான தெய்வம் .
நீயாதரிக்கின்ற நிஜ ரூபன்  என்று நான் எனதுளம் தெளிவு கொண்டு
நின் சரண தூளி  என் சிரமீதணிந்து உன் நிஜ பக்த பிரியனாமென்
காயாபுரித் தலைவா நான் கவலை கொண்டு கண்ட இடமெலாம் சுற்றி வந்தேன்
கண்காட்சி தந்து எனது புண்பாடு அறிந்து அருளும் காருண்ய வாரிநிதியே
தாயான பூரணி புராதனி மகிழ்ந்தருளும் தர்மசாஸ்த்ரையனென்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞானகுருவே .
                                         ...............................ஸ்வாமிய சரம ஐயப்பா.

மங்களானந்த சரணங்களை வணங்கி அருள் வாக்கினால் பஞ்ச இரத்தின மாலைபோல் ஓதினேன்
மலை வளரும் ஆதி கவிவாணர்தம் திருவருளால் எங்கும் நிறை ஈசனே
நீ மனதிரங்கி இவ்வேழைசொல் செவியுணர்ந்து
ஏழை இது உன் திருக்கருணை ரசமழை பொழியும் ஏனலோஜனதை நாட்டி
பொங்கு புவிமீதினில் எங்கு சென்றாலும் உன் புகழ் பாடி யான் வாழவே
புத்திர , மித்ர, களத்ர , பக்தி , முக்தி ,ஞான சௌபாக்கியமும்  அருள்வீர்
பைங்குவீர் நானிலத்து உதித்த வாசனென்றும்,
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞான குருவே

                                          ....................சுவாமிய சரணம ஐயப்பா.......