Saturday, December 6, 2014

விண்கொண்ட தேவர்கள் போற்றிப் பணிந்திடும்

விண்கொண்ட  தேவர்கள்  போற்றிப் பணிந்திடும் 

விண்கொண்ட தேவர்கள் போற்றிப் பணிந்திடும் மெய்ப்பொருளே கலியுக வரதா
பண்கொண்ட செந்தமிழ் தோத்திரம் பாடியே பணிந்தனம் ஆண்டருள்வாய் நீ சதா .
ஐயப்பா உன்போல் தெய்வம் அவனியில் இல்லையப்பா , அதிசயப் பிறவியப்பா அருள்தரும் பிள்ளையப்பா .
அமரர்களும் புலியாய்  ஆனார் உமக்கப்பா , ஹரிஹரன் உமக்கம்மை அப்பனுமப்பா

இருமுடி தாங்கியே மாமலை ஏறி வந்து ஈஸ்வரனே உந்தன் காட்சி கண்டோர்
கரும வினை அகன்றே நலம் எய்திட காண்பதன்றோ  , சந்தேகமுண்டோ

சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏறி  வரும் சதமக பதவிகொள் தேவேந்திரன்
சித்தம் மகிழ்ந்தவன் செய் தவ பாக்யதினால் சிம்ஹ வாகனமாகி உனைச் சுமந்தான் .

அன்புடன் மாலை அணிந்துனை போற்றிடும் ஐயப்பன் மாரெல்லாம் நீயே அன்றோ .
துன்பம் தவிர்த்து  எனை ஆண்டருள்வாய் இன்னும் சோதனை ஏனுனக்கு  இது நன்றோ .

அம்புவி மாருதம் வென்புனல் தீயும் நீ . அண்ட சராசரம் யாவையும் நீ
ஆய அப்பனும் குரு தெய்வமும் , வேத புராண கலைகளும் அறிவனும் நீ
கூறும் மெஞ்ஞானிகள் உள்ளமே கோயிலாய் கொண்டவனே வருவாய்  தருணம்
ஆறும் கடந்த பிரகாச பிரம்மானந்த ஐயப்ப ஸ்வாமி பொன்னடி சரணம்
சரணம் ஐயப்பா , ஐயப்பா சரணம் என்று ஓதும் உனைச் சார்ந்தோர் தரணியில் உயர்ந்தோர்
 காசினில் துயரப்பா கடிதினில்  தீரப்பா , கலியுக மெய்யப்பா துய்யனே ஐயப்பா .


No comments: