எனக்கு நாலு வயசிருக்கும். என்னை சிறந்த கல்வியாளனாக காணவேண்டும் என்ற கனவோடு பெரியப்பா மாணிக்கம் அவர்கள் என்னை தன் மடியிலிருத்தி ஒரு பெரிய தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதில் அகர முதல எழுத்துக்களை சொல்லி கொடுத்தார். அது முடிந்து ஆறு மாசத்தில் நான் அவருக்கு " My dear Big Father" என்று தொடங்கி ஒரு கடிதம் எழுதினேன். அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அதற்குப்பின் எழுதுவதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை. எட்டாவது வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு மலருக்கு ஒரு சிறுகதை எழுதினேன். ஊக்குவிப்போர் இல்லாத காரணத்தினால் எழுதுவதில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. இப்பொழுது ஒரு புது முயற்சியில் இறங்குக்றேன். எழுதலாம் என்று நினைத்து புதிதாக தலைப்புகளை யோசிக்கிறேன். என் துறை சார்ந்த சிந்தனைகளையும் மற்ற துறைகளை சார்ந்த கருத்துகளையும் இங்கே தருவது என் விருப்பம்.
ப்ரியத்தின் செங்கனல்
-
உனக்கான நேரமே இல்லாமல்
தினசரிகளில் தொலைந்து
சோர்ந்திருக்கும் நேரம்
உன் பெயர் கேட்டதும்
அகமலர்ந்து
கண்கள் அகல விரிய
உன் பிடித்தமான
தெற்றுப் பல் தெரிய
இதழ...
10 years ago
3 comments:
நீங்க இங்க எழுதரதையும் உங்க Big Father ஐ வந்து பார்க்க சொல்லுங்கோ சார். ரொம்ப சந்தோஷப்படுவார்.
நீங்கள் நல்ல சிந்தனையாளர், நல்ல நண்பன். உங்களிடம் எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் எழுதும் திறமை இருக்கு சார்.
நல்ல, ஆக்கப்பூர்வமான, பயனுள்ள எழுத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார்.
Woow! You did the right job.. Better late than never. :-)
I always wanted you to write in Tamil! You are so good at it..
Hmm.. Get going.. Let nothing stop you from penning your thoughts down.. Sorry, blogging your thoughts now!
Vaikuntathil internet irunthaal en "Big Father" en blog-i padikka mudiyum. Kandippaga santhoshappaduvaar. Ennai pala vishayangalil ookuvithavar avar. athaippatri oru blog thaniyaga varum.
Post a Comment