நோண்டல். இது எனக்கு பிடித்தமான ஒன்று. எந்த ஒரு பொருளையும் நான் அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை. அதை திறந்து பார்த்து கற்றுக்கொள்ள என்மனசு துடிக்கும். இப்படித்தான் என் பெரியப்பா மாணிக்கத்தின் வீட்டில் இருந்த ஒரு பழைய கிராமபோன் என்னை ஈர்த்தது. அதை திறந்து பார்த்து அதன்
மெக்கநிசத்தை கற்றுக்கொண்டேன். அதன் சவுண்ட் பாக்ஸ் எப்படி ஒரு சின்ன ஊசியிலிருந்து ஓசையை வாங்கி அதை பெரிதாக்கி கொடுக்கிறது என்று தெரிந்துகொண்டேன். இதற்கு என் பெரியப்பா தந்த ஊக்கம் என்னை ரேடியோ ரெக்கார்ட் பிளேயர் என பல்வேறு சமாசாரங்களை நோண்ட வைத்தது. ஒரு முறை சிதம்பரம் சித்தப்பா வீட்டில் ரேடியோ பழுதானபோது அதை 'ஐயப்பன் பார்த்து கொள்ளட்டும்' என விட்டு விட்டார். நானும் நோண்டி ஒரு வால்வை உடைத்து விட்டேன். பிறகு புதிய வால்வு வாங்கி போட்ட பிறகு பாடியது. எனக்கு புதுப்பாடம் கிடைத்தது. நோன்டும்போது கவனமாக இரு. எதையும் உடைக்காதே. இது தான் அந்த பாடம் . இன்றுவரை இதை நான் நினைவில் வைத்துள்ளேன். இன்று நான் ஒரு தேர்ந்த நோன்டியாவதற்கு இவர்கள் கொடுத்த ஊக்கம்தான் காரணம். இப்பொழுது கம்பியூட்டரின் வலை பின்னலில் புகுந்து விளையாட இந்த ஊக்கம்தான் என்னை நகர்த்துகிறது, நடத்துகிறது.
2 comments:
'Therntha Nonti'
Hilarious!
ha ha ha
Nonduvathu enbathu verum pozhuthu pokirkaga mattum illamal, Arivu pasikkum theeniyaga amaiyumpothu, athigamaga nonda thoondum santharpangal ennai oru therntha 'NONDI'yaaga aakkiyathil viyappillai.
Post a Comment