ஸ்ரீ ஐயப்பன் பஞ்சரத்தின மாலை
கருணாகரக் கடவுள் அரனாரிடம் சென்று சூர்பகாசுரன் தவமிருந்து
கை வைத்தபேர் சிரசு துய்ய நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம் குருவாம் அரன் சிரசில் அவன் கரம் வைதிடச் சென்றடுத்தான்
வள்ளல் அய்யன் ஐவரளிக் காய்தனில் ஒளிந்ததை மால் அறிந்தோடி வந்து
சரச மோகினியாகி அசுரனை நீறாக்கி சம்புவை அணைந்து பெற்ற
சந்ததிப் பொருளாகி வந்த கண்மணியே என் சங்கடம் தீருமையா .
சரணம் ஐயப்பா என்றுருகும் அன்பர்க்கு நீர் சகல சாம்ராஜ்யம் அருளும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரம சத்தான மெய்ஞான குருவே .
..........................................ஸ்வாமியே சரணம் ஐயப்பா .
பண்டு காலாஸ்ய பதி கொண்ட மீனாக்ஷி நிஜ பக்தனாம் உக்ரபாண்டியன்
பாலகன் வேண்டுமென்று ஈசனாம் சம்புவை பிரார்த்தித்து அனேக வரமும்
கொண்டு மனமகிழ் பூபன் அண்டையில் மால் அரன் மனம் இசைய மூர்த்தியாகி
குமரவேஷத்தினால் அவரை மோகம் செய்து கொஞ்சிடத் தஞ்சமென்று
தொண்டு செய்கின்ற நாளன்று கள்வர்களாம் துஷ்டரை நிக்ரஹித்த
தீரனே , தீன பரிபாலனே நீ எனதுள துயரமெல்லாம் அகற்றும் .
சண்டப் பிரசண்ட உத்தண்ட கோதண்ட தர்ம சாஸ்த்ரையனென்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம சத்தான மெய்ஞான குருவே.
.................ஸ்வாமியே சரணம் ஐயப்பா
பச்சை நிறம் மெச்சுமொரு நற்புரவி மீதினில் சவாரி வரும் தீரன் என்றும்
கண்டிருக்கின்றதொரு தொண்டருக்காகவே காலினில் விலங்கு பூட்டி
துட்ஷணம் செய்யாமல் யக்ஷியை இருத்தியும் சொல்வாரிது கேட்க வைத்த
தொண்டிமை ஆகுமென் துயர் தீர்த்து அனுகிரஹம் உறுதியாய்ச் செய்யுமையா
சச்சிதானந்த ஹரி சங்கரானந்த ஜெய சம்மோஹனாங்கன் என்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞான் குருவே
........................ஸ்வாமியே சரணம் ஐயப்பா .
மாயானுபூதியால் யானுமுந்தன் பதம் மறந்திருந்தேன் இதுவரை
மற்றொருவர் இல்லையே இத்தரணி மீதிலென் வம்ச வழியான தெய்வம் .
நீயாதரிக்கின்ற நிஜ ரூபன் என்று நான் எனதுளம் தெளிவு கொண்டு
நின் சரண தூளி என் சிரமீதணிந்து உன் நிஜ பக்த பிரியனாமென்
காயாபுரித் தலைவா நான் கவலை கொண்டு கண்ட இடமெலாம் சுற்றி வந்தேன்
கண்காட்சி தந்து எனது புண்பாடு அறிந்து அருளும் காருண்ய வாரிநிதியே
தாயான பூரணி புராதனி மகிழ்ந்தருளும் தர்மசாஸ்த்ரையனென்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞானகுருவே .
...............................ஸ்வாமிய சரம ஐயப்பா.
மங்களானந்த சரணங்களை வணங்கி அருள் வாக்கினால் பஞ்ச இரத்தின மாலைபோல் ஓதினேன்
மலை வளரும் ஆதி கவிவாணர்தம் திருவருளால் எங்கும் நிறை ஈசனே
நீ மனதிரங்கி இவ்வேழைசொல் செவியுணர்ந்து
ஏழை இது உன் திருக்கருணை ரசமழை பொழியும் ஏனலோஜனதை நாட்டி
பொங்கு புவிமீதினில் எங்கு சென்றாலும் உன் புகழ் பாடி யான் வாழவே
புத்திர , மித்ர, களத்ர , பக்தி , முக்தி ,ஞான சௌபாக்கியமும் அருள்வீர்
பைங்குவீர் நானிலத்து உதித்த வாசனென்றும்,
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞான குருவே
....................சுவாமிய சரணம ஐயப்பா.......