மன்றுள் ஆடியவா ஈசா மன்றுள் ஆடியவா
கன்று மானை கரத்தில் தரித்தவா
கங்கையை தன சடையில் அணிந்தவா
பண்டு முப்புரம் தன்னை எரித்தவா
வந்தியின் பிட்டுக்கு உவந்து மண் சுமந்து ( மன்றுள் )
மலைய துவஜ பாண்டியனுக்கு நல்
மருகனாய் வந்த திரு அவதாரா
வளையல் விற்றிட வைசியனாய் வந்தாய் (2)
வரகுணன் காணவே உந்தன்
பர லோக தரிசனம் தந்தாய் ( மன்றுள் )
வாடிய நாரைக்கு முக்தியைத் தந்தவா
வாதவூரரை ஆளாக்கி வைத்தவா
பாடிய பாஸ்கரன் பாடுக்குகந்தவா
பதஞ்சலி முனிவர் தொழ
ததிங்கிண தித்தோம் எனவே (மன்றுள்)
No comments:
Post a Comment