துவாரகா பூரி பட்டணமாம் சதுரங்கத் தள மேடையாம்
ஸ்வாமி வாசம் பண்ணுகிற சுப்ரா மஞ்சம் மீதிலே
ரத்னம் இழைச்ச அம்சங்களாம் லக்ஷ்மியோட பார்வையாம் , லக்ஷ்மியோட சேர்வையாம் .
நித்ய மங்களம் பொழியும் நீல வண்ண சேர்வையாம் .
கஸ்தூரி பன்னீர் புனுகு கம கமன்னு வீசுமாம் .
கனக மயமாய் விளங்கும் கண்ணன் துவாரகையிலே.
சுவர்ணத்தினால் கோட்டைகளாம் ஸ்வயம் பிரகாச மேடையாம் .
திக்குகள் திசைகள் தோறும் துந்துபி முழங்குமாம்.
குஞ்சலம் கொழ கண்ணுகளாம் கோடி லக்ஷம் பசுக்களாம்.
குடம் குடமாய் பால் சொரியும் கோபாலர்தம் நாட்டிலே.
ஆனைப்பந்தி குதிரைப்பந்தி அணியணியாய் நிக்குமாம்.
அற்புதமாம் மான் கலைகள் அங்கே விளையாடுமாம்.
மட்டில்லாத வருக்க்ஷங்களாம் மான் கலைகள் கூட்டமாம்
மாடப் புறா மைதானங்கள் வந்து விளையாடுமாம் .
திவ்ய சந்தன விருட்ஷங்களாம் செம்பகப்பூ தோட்டமாம்.
ஜெகத்திலுள்ள புஷ்ப வகை சேர்ந்தங்கே சொரியுமாம் .
பிச்சியோடு மல்லிகையும் பூமணங்கள் வீசுமாம்
பூலோகத்து தேவருக்கு பிரியமாய் இருக்குமாம் .
மாதுளையோடு மாங்கனியும் வரிக்கையோடு கதலியும்
மட்டில்லாத பழங்களெல்லாம் திட்டமாய் பழுக்குமாம்.
எட்டிப் புல் பந்தெடுத்த்து கிரீடித்து விளையாடுமாம்
வட்டமிட்டு குஞ்சுகளும் மகிழ்ந்து கொண்டிருக்குமாம்.
இலக்கில்லாத தேவர்களாம் லட்ஷம் கோடி கூட்டமாம்.
நின்னு விளையாடுகிற குஞ்சுகள் குழந்தையும் .
வேத சாத்திரங்கள் சொல்லி விருது சங்கம் முழங்குமாம்
விஷ்ணு பக்தாள் என்று சொல்லி வெண்சாமரம் போடுமாம்.
கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லி கிளி கீர்த்தனங்கள் பாடுமாம்
விஷ்ணுவோட நாமம் சொல்லி வழி மறந்திருக்குமாம்.
மழை பொழிய கதிர் குலைகள் வரப்பெல்லாம் நெல் விலையுமாம்
மட்டில்லாத தானம் வெளைஞ்சு வந்து அலை மோதுமாம் .
கடல் கரைகள் பொங்கி வர கரும்பாலைகள் ஆடுமாம்
கட்டி கட்டியாய் பழங்கள் கண்ணனுக்கு ஏற்குமாம் .
பழக்குலைகள் அத்து விழா பால் அருவி பாயுமாம்
தேனருவி ஓடிவர திவ்ய வண்டு பாடுமாம்.
மஞ்சாப் பூ மருதாணிப் பூ பூமணங்கள் வீசுமாம்
மஹா லட்சுமி மஹிமை சொல்லி வையகம் கொண்டாடுமாம் .
அடுக்கடுக்காய் தோரணமாம் ஆலவட்டம் வீசுமாம்
அமோகமான பாக்கியமெல்லாம் அங்கேதான் இருக்குமாம் .
இரு பேரும் விளையாடி இருக்கும் சிம்மாசனங்களாம்
இடைக்கு இடைக்கு காமதேனு கற்பக விருட்சங்களாம் .
இன்பமுடன் கிளிகள் வந்து இடைப் பழங்கள் கொத்துமாம்.
ஏற்றமுள்ள வண்டுகளும் வந்து விளையாடுமாம்