Monday, August 16, 2021

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாயா

 #நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை ''நகாராய'' நம சிவாய...


#மந்தாகினி சலில சந்தன சர்ச்சிதாய

நந்தீஸ்வர ப்ரமதநாத மகேஸ்வராய

மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய

தஸ்மை ''மகாராய'' நம சிவாய...


#சிவாய கெளரி வதநாப்ஜ  வ்ருந்த

சூர்யாய தக்ஷாத் வர நாஸகாய

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷ்ஹ த்வஜாய  

தஸ்மை ''சிகாராய'' நம சிவாய...


#வசிஷ்ட  கும்போத்பவ கௌதமார்ய

முநீந்திர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க  வைஷ்வாநர லோச்சனாய

தஸ்மை ''வகாராய'' நம சிவாய...


#யக்ஷஸ் வரூபாய ஜடாதராய

பினாக ஹஸ்தாய சனாதனாய

திவ்யாய  தேவாய திகம்பராய

தஸ்மை ''யகாராய' நம சிவாய...


பஞ்சாக்ஷரம்  இதம் புண்யம்

ய: படேத் சிவ சந்நிதௌ

சிவலோகம் அவாப்னோதி 

சிவேன ஸஹ மோததே:


'' ஓம் நம சிவாய ... சிவாய நம ஓம் ''

Saturday, March 28, 2020

ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி அஷ்டகம்

ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி அஷ்டகம்
நித்யானந்தகரி வராபயகரி ஸௌந்தர்ய ரத்னாகரி
நிர்துதாகில கோரபாபநகரி  ப்ரத்யக்ஷ மாஹீச்வரி
ப்ரலேயாச்சல வம்சபாவநகரி காஸி  புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

நானா ரத்னா விசித்திர பூஷநகரி ஹேமாம் பராடம்பரி
முக்தாஹாரா விளம்பமான விளாசத் வக்ஷோஜா கும்பாந்தரி
காஷ்மீரா கரு வாசிதா ருசிகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

யோகா நந்தகரி ரிபுக்ஷயகரி தர்மைக நிஷ்டாகரி
சந்த்ரார் கானல பாஸமான லஹரி த்ரைலோக ரக்ஷாகரி
ஸர்வைஸ் வர்யகரி தப: பலகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

கைலாசாசல கந்தரா லயகரி கௌரி உமா சங்கரி
கௌமாரி நிகமார்த்த கோசரகரி ஓம்கார பீஜாக்ஷரி 
மோக்ஷத் வாரக வாட பாடனகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

த்ருஸ்யா த்ருஸ்ஸ வீபூதி வாஹநகரி பிரம்மாண்ட பாண்டோதரி
லீலா நாடக சூத்ர கேளனகரி விக்ஞான தீபான்குரி
ஸ்ரீ விஷ்வேஷ மன: ப்ரசாதனகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

ஆதிக்ஷாந்த சமஸ்த வர்னனகரி சம்போ ப்ரியே ஷாங்கரி
காஷ்மீர த்ரிபுரேச்வரி த்ரினயணி விஸ்வேஸ்வரி சர்வரி
சுவர்கத் த்வாரக வாட பாடநகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

ஊர்வி சர்வஜநேச்வரி ஜெயகரி மாதா க்ருபாஸாகரி
வேணி நீலஸமான குந்தலதரி நித்யான்ன தனேஸ்வரி
ஷாக்ஷான் மோக்ஷகரி சதா சுபகாரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

தேவி சர்வ விசித்திர  ரத்னா ரசிதா தாக்ஷாயணி சுந்தரி
வாமாஸ் வாது பயோதர ப்ரியகரி சௌபாக்ய மஹேஸ்வரி
பக்தா பீஷ்டகரி சதா சுபாகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

சந்த்ரார் கானல கோடி கோடி சத்ருசி சந்த்ரம்சு பிம்பாதரி
சந்த்ரார் காக்னி சமான குண்டலதரி சந்த்ரார்க்க வர்னேச்வரி   
மாலா புஸ்தக  பாஷ  சாங்குஷதரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

க்ஷத்ர த்ரானகரி மஹா பயகரி மாதா க்ருபாசாகரி   
சாக்ஷான் மோக்ஷகரி சதா சிவகரி விஷ்வேச்வரி ஸ்ரீதரி
தக்ஷ க்ரந்தகரி நிராமயகரி காஸி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே 
ஞானவைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ  :
பாந்தவ சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவநத் த்ரயம்

||இதி ஸ்ரீ அன்னபூர்ண ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

மார்கபந்து ஸ்தோத்ரம்

ஸ்ரீ மார்க்கபந்து ஸ்தோத்திரம்


சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம்ரத் - க்ரீடம், பாலநேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷு - கீடம்
சூலாஹதாராதி - கூடம், சுத்த - மர்த்தேந்து - சூடம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

அங்கே விராஜத்புஜங்கம், அப்ரகங்காதரங்கா பிராமோத்தமாங்கம்
ஓங்காரவாடீ - குரங்கம், ஸித்தஸம்ஸேவிதாங்க்ரிம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

நித்யம் சிதானந்தரூபம், நிஹ்னுதாசேஷ - லோகேச - வைரிப்ரதாபம்
கார்த்தஸ்வராகேந்த்ர சாபம், க்ருத்தி - வாஸம் பஜே திவ்ய - ஸன்மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

கந்தர்ப்ப - தர்ப்பக்ன - மீசம் காலகண்டம் மஹேசம் மஹாவ்யோமகேசம்
குந்தாபதந்தம் ஸுரேசம், கோடி - ஸுர்யப்ரகாசம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

மந்தாரபூதேருதாரம் மந்தராகேந்த்ர - ஸாரம் மஹா - கௌர்யதூரம்
ஸிந்தூரதூரப்ரசாரம், ஸிந்துராஜாதிதீரம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

அப்பய்ய - யஜ்வேந்த்ர - கீதம் ஸ்தோத்ரராஜம் படேத் யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்திம் விதத்தே, மார்க்கமத்யே அபயஞ் சாசுதோஷோ மஹேச:
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ


--- அப்பய்ய தீட்சிதர்

Monday, April 29, 2019

துவாரகாபூரி வர்ணனை .

துவாரகா பூரி பட்டணமாம் சதுரங்கத் தள மேடையாம்
ஸ்வாமி வாசம் பண்ணுகிற சுப்ரா மஞ்சம் மீதிலே
ரத்னம் இழைச்ச அம்சங்களாம் லக்ஷ்மியோட பார்வையாம் , லக்ஷ்மியோட சேர்வையாம் .
நித்ய மங்களம் பொழியும் நீல வண்ண சேர்வையாம் .

கஸ்தூரி பன்னீர் புனுகு கம கமன்னு வீசுமாம் .
கனக மயமாய் விளங்கும் கண்ணன் துவாரகையிலே.
சுவர்ணத்தினால் கோட்டைகளாம் ஸ்வயம் பிரகாச மேடையாம் .
திக்குகள் திசைகள் தோறும் துந்துபி முழங்குமாம்.

குஞ்சலம் கொழ கண்ணுகளாம் கோடி லக்ஷம் பசுக்களாம்.
குடம் குடமாய் பால் சொரியும் கோபாலர்தம் நாட்டிலே.
ஆனைப்பந்தி குதிரைப்பந்தி அணியணியாய் நிக்குமாம்.
அற்புதமாம் மான் கலைகள் அங்கே விளையாடுமாம்.

மட்டில்லாத வருக்க்ஷங்களாம் மான் கலைகள் கூட்டமாம்
மாடப் புறா மைதானங்கள் வந்து விளையாடுமாம் .
திவ்ய சந்தன விருட்ஷங்களாம் செம்பகப்பூ தோட்டமாம்.
ஜெகத்திலுள்ள புஷ்ப வகை சேர்ந்தங்கே சொரியுமாம் .

பிச்சியோடு மல்லிகையும் பூமணங்கள் வீசுமாம்
பூலோகத்து தேவருக்கு பிரியமாய் இருக்குமாம் .
மாதுளையோடு மாங்கனியும் வரிக்கையோடு கதலியும்
மட்டில்லாத பழங்களெல்லாம் திட்டமாய் பழுக்குமாம்.

எட்டிப் புல் பந்தெடுத்த்து கிரீடித்து விளையாடுமாம்
வட்டமிட்டு குஞ்சுகளும் மகிழ்ந்து கொண்டிருக்குமாம்.
இலக்கில்லாத தேவர்களாம் லட்ஷம் கோடி கூட்டமாம்.
நின்னு விளையாடுகிற குஞ்சுகள் குழந்தையும் .

வேத சாத்திரங்கள் சொல்லி விருது சங்கம் முழங்குமாம்
விஷ்ணு பக்தாள் என்று சொல்லி வெண்சாமரம் போடுமாம்.
கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லி கிளி கீர்த்தனங்கள் பாடுமாம்
விஷ்ணுவோட நாமம் சொல்லி வழி மறந்திருக்குமாம்.

மழை பொழிய கதிர் குலைகள் வரப்பெல்லாம் நெல் விலையுமாம்
மட்டில்லாத தானம் வெளைஞ்சு வந்து அலை மோதுமாம் .
கடல் கரைகள் பொங்கி வர கரும்பாலைகள் ஆடுமாம்
கட்டி கட்டியாய் பழங்கள் கண்ணனுக்கு ஏற்குமாம் .

பழக்குலைகள் அத்து விழா பால் அருவி பாயுமாம்
 தேனருவி ஓடிவர திவ்ய வண்டு பாடுமாம்.
மஞ்சாப் பூ மருதாணிப் பூ பூமணங்கள் வீசுமாம்
மஹா லட்சுமி மஹிமை சொல்லி வையகம் கொண்டாடுமாம் .

அடுக்கடுக்காய் தோரணமாம் ஆலவட்டம் வீசுமாம்
அமோகமான பாக்கியமெல்லாம் அங்கேதான் இருக்குமாம் .
இரு பேரும் விளையாடி இருக்கும் சிம்மாசனங்களாம்
இடைக்கு இடைக்கு காமதேனு கற்பக விருட்சங்களாம் .

இன்பமுடன் கிளிகள் வந்து இடைப் பழங்கள் கொத்துமாம்.
ஏற்றமுள்ள வண்டுகளும் வந்து விளையாடுமாம்

சித்தம் இரங்கவில்லையா?

சித்தம் இரங்கவில்லையா? கோமதித் தாயே
சத்தம் செவிக்கு வல்லையா.(2)
பக்தி வைராக்கியத்தில் பழகின ஜனங்களுக்கு
முக்தி கொடுக்கும் அந்த
மூல கரணி அம்பா - சித்தம்.

காசு பெருமையோ
கணவர்மேல் கவனமோ.
கடைக் கண்ணால் பாராயோ
கவலையைத் தீராயோ.
பேசினால் வாய்முத்து
பெருகி உதிர்ந்திடுமோ.
நீ பெற்ற பிள்ளையின் மீது
இத்தனை வன்மமோ. - சித்தம்.

Saturday, April 27, 2019

மிட்டாய் வேண்டுமா?

மிட்டாய் வேண்டுமா?
சின்னச் சின்ன உருண்டை மிட்டாய்
சீனியிலே செய்த மிட்டாய்
கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில்
கலப்பில்லாத அசல் மிட்டாய்
பச்சை நிறமான மிட்டாய்
பட்டு நிறம் காட்டும் மிட்டாய்
இச்சையுடன் வாங்கித் தின்றால்
இன்பம் தரும் அழகு மிட்டாய்
பாலைப் போல வெள்ளை மிட்டாய்
பாகு போல இனிக்கும் மிட்டாய்
காலைப் பகல் மாலையிலும்
கடித்துத் தின்று மகிழ்ந்திடலாம்
தின்னத் தின்னத் தெவிட்டாது
தேனும் இதுபோல் இனிக்காது
நாவில் ஊறும் சுவையதுவும்
நாள் முழுதும் மாறாது.



இந்த பாடல் எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மயில் வாசகம் என்ற பாடநூலில் வந்தது.

Thursday, November 12, 2015

திருப்புகழ் .

முத்தைத்தரு-திருப்பறங்குன்றம்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.