Tuesday, December 9, 2014

முருகன் பாமாலை

முருகன் பாமாலை .

ஆதி மூல முருகா -முருகா  ஆதி தேவ முருகா .
ஞான பால முருகா - முருகா  ஞான தேவ முருகா
கோவில நாடி வந்தேன்  முருகா - குறைகள் தீர்க்க வருவாய் -உன்
மலையை நாடி வந்தேன் முருகா - மனமிரங்கி வருவாய் .- பல
படிகள் ஏறி வந்தேன் முருகா பரிவடைந்து வருவாய்
கிரியிலேறி வந்தேன் முருகா பெரிய வாழ்வு தருவாய்
கவிகள் படி வந்தேன் முருகா கருணை ஒன்று தருவாய் - பல
துதிகள் பாடி வந்தேன் முருகா துணைவனாகி வருவாய் .
மயில் அழைக்க வந்தேன் முருகா மனமகிழ்ந்து வருவாய் .
கொடியழைக்க வந்தேன் முருகா குணமறிந்து வருவாய் .
அடிமையாகி வந்தேன் முருகா அதிபனாகி வருவாய் .-உன்
அருமை கண்டு வந்தேன் முருகா அகமகிழ்ந்து வருவாய் .
வினைகள் நீங்க வந்தேன் முருகா வேவெடுது வருவாய் . -என்
பவமழிக்க வந்தேன் முருகா பதமளிக்க வருவாய் .
மது மணக்கும் மலரே முருகா மனமிருக்கும் ஒளியே .
அதிசயத்தின் உருவே முருகா அருண ஞான குருவே .
வேத நாத ஒளியே முருகா வேத போத முடிவே .
வேத போத முடிவே முருகா வேத கான வடிவே .
காலமற்ற கலையே முருகா கருவமற்ற நிலையே .
கனமயூர மணியே முருகா கௌரி தந்த கனியே.
அன்னை தந்தை ஆனாய் முருகா அரிய செல்வம் ஆனாய் .
என்னை ஆளும் முருகா - முருகா உன்னை என்றும் மறவேன் .
அன்பர் ஒங்க வேண்டும் முருகா அவனி ஒங்க வேண்டும் .
துன்பம் நீங்க வேண்டும் முருகா இன்பம் ஒங்க வேண்டும் .
தர்மம் ஒங்க வேண்டும் முருகா தானம் ஒங்க வேண்டும் .
தவமும் ஒங்க வேண்டும் முருகா சாந்தி ஒங்க வேண்டும் .
பக்தி ஒங்க வேண்டும் முருகா சக்தி ஒங்க வேண்டும் .
சக்தி  ஒங்க வேண்டும் முருகா சித்தி ஒங்க வேண்டும் .
அன்பர் கூட வேண்டும் முருகா துதிகள் பாட வேண்டும் .
துதிகள் பாட வேண்டும் முருகா நீயும் ஆட வேண்டும் .
மயிலும் ஆட வேண்டும் சேவல் கொடியும் ஆட வேண்டும் .
அயிலும் ஆட வேண்டும் முருகா அரவம் ஆட வேண்டும் .
உமையும் ஆட வேண்டும் முருகா உலகம் ஆட வேண்டும் .
தமையன் ஆட வேண்டும் உனது தந்தை ஆட வேண்டும்
ஞான ஜோதி மயமே எங்கும் நாம கீதா மயமே .
நாம கீதா மயமே எங்கும் முருகன் நாம மயமே .

அரோஹர........

No comments: